முறையற்ற வேக்சினேஷன் மூலம்.. புதிய உருமாறிய கொரோனா தோன்றலாம்.. பிரதமருக்கு வல்லுநர்கள் குழு ஆலோசனை!
டெல்லி: முறையற்ற வேக்சினேஷன், எல்லோருக்கும் மொத்தமாக வேக்சின் போடுவது மூலம் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளை உருவாக்கும் ஆபத்து உள்ளது என்று வல்லுநர்கள் குழு பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கி உள்ளது.
Recommended Video
நாடு முழுக்க 18+ வயது கொண்ட எல்லோருக்கும் வேக்சின் போடும் வகையில் மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மாற்றி உள்ளது. நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு, இந்திய பொது சுகாதார சங்கம், இந்திய தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கம், மற்றும் இந்திய தொற்றுநோயியல் நிபுணர்கள் சங்கத்தை சேர்ந்த வல்லுநர்கள் வேக்சின் வழங்குதல் குறித்து ஆலோசனை வழங்கி உள்ளனர். அவர்கள் சார்பாக பிரதமரிடம் அளிக்கப்பட்டுள்ள ரிப்போர்ட்டில் பின்வரும் பரிந்துரைகள் உள்ளன.

பரிந்துரை
அதில், முறையற்ற வேக்சினேஷன், எல்லோருக்கும் மொத்தமாக வேக்சின் போடுவது மூலம் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளை உருவாக்கும் ஆபத்து உள்ளது. எல்லோருக்கும் மொத்தமாக வேக்சின் போடுவதும், 18+ வயது கொண்ட எல்லோருக்கும் வேக்சினேஷனை திறந்து விடுவதும் ஆபத்தானது. அவசியமற்றது.

தேவை
இப்போது தேவை எல்லாம் நோய் உள்ளவர்கள், எளிதாக பாதிக்க கூடியவர்கள், வயதானவர்களுக்கு வேக்சின் போடுவதுதான். வேக்சின் கொடுப்பதில் சரியான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மொத்தமாக வேக்சின் சந்தையை திறப்பது எளிதாக பாதிக்க கூடியவர்கள், வயதானவர்களுக்கு வேக்சின் கிடைக்காத நிலைமை ஏற்படுத்தும், வேக்சின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும், இப்போது இது சாத்தியமும் இல்லை.

வேக்சின்
வயதான நபர்கள், எளிதாக கொரோனா பாதிக்க கூடியவர்களுக்கு வேக்சின் போடாமல் போனால் அதனால் புதிய வகை கொரோனா உருவாகும் வாய்ப்பு ஏற்படும். இப்போதே எல்லா இளைஞர்களுக்கும் வேக்சின் போட முடியாது. அதனால் முதலில் வயதானவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் ஏற்கனவே கொரோனா வந்தவர்களுக்கு இயற்கையாக இருக்கும் எதிர்ப்பு சக்தி குறித்து ஆராய வேண்டும்.

இயற்கை
இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி போதுமா என்று ஆராய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு உடனே வேக்சின் போடுவதை தவிர்க்கலாம். ஏற்கனவே கொரோனா வந்தவர்களுக்கு வேக்சின் போட வேண்டிய அவசியம் இப்போது இல்லை. வேக்சின் என்பது வலுவான ஆயுதம். அதை முறையாக பயன்படுத்த வேண்டும். செரோபாசிட்டிவிட்டி கணக்கிட்டு அதன்மூலம் வேக்சின் தர வேண்டும்.

செரோபாசிட்டிவிட்டி
ஒரு மாவட்டத்தில் செரோபாசிட்டிவிட்டி 70%க்கும் அதிகம் இருந்தால் அங்கு லாக்டவுனில் தளர்வுகளை கொண்டு வரலாம். அங்கு மேலும் கொரோனா பரவ வாய்ப்பு குறைவு. அதனால் இங்கு வேக்சின் கொடுப்பதையும் குறைத்துக் கொண்டு, குறைவான செரோபாசிட்டிவிட்டி கொண்ட மாவட்டங்களுக்கு அதிக வேக்சின் கொடுக்கலாம். இது போல வேக்சின் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கலாம்.

மியூட்டேட்
அதோடு இந்தியாவில் பல வகை மியூட்டேட் கொரோனா இருப்பதால், கொரோனா ஜீனோம் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். 1000 கேஸ்களுக்கு ஒரு ஜீனோம் சோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் எவ்வளவு உருமாறிய கொரோனா மக்களிடையே பரவுகிறது என்று கண்டறிய வேண்டும். உலக நாடுகள் 5%க்கும் அதிகமான ஜீனோம் சோதனை செய்யும் நிலையில் நாம் 1% மட்டுமே செய்கிறோம் என்று வல்லுநர் குழு பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கி உள்ளது.
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications