பாகிஸ்தான் முகத்தில் கரிபூச்சு! குடியரசு தினத்தில் இந்தியா வர இந்தோனேசியா அதிபர் செய்த மாஸ் சம்பவம்
டெல்லி: டெல்லியில் இன்று நடந்த குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இந்த விழாவில் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியான்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தியா தான் முக்கியம் என்று பாகிஸ்தான் முகத்தில் கரியை பூசி வந்த விஷயம் பலருக்கும் தெரியாது. அதுபற்றி இங்கே பார்ப்போம்
நாடு முழுவதும் இன்று கோலாகலமாக குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் ராஜபாதையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் இந்தோனேஷிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை அதிகாரிகள் உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தேசியக்கொடி ஏற்றி வைத்த பிறகு நம் நாட்டு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை மற்றும் இந்தோனேஷியா படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அணிவகுப்பு கடமைப்பாதையில் தொடங்கி இந்தியா கேட் பகுதி வரை நடந்தது . இதனை ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.அதன்பிறகு நம் நாட்டின் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், படைகளின் வலிமையை உணர்த்தும் நோக்கத்திலும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஊர்திகள் இடம்பெற்றிருந்தது.
சரி, இந்த பெருமைமிகு தருணம் இருக்கட்டும். இனி இன்னொரு விஷயத்தை பார்ப்போம். அதாவது நம் நாட்டின் குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானின் முகத்தில் இந்தோனேஷியா அதிபர் பிரபோவா சுபியாண்டோ கரிபூசியது பற்றி பார்ப்போம். அதாவது நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போதும் மத்திய அரசு வெளிநாட்டு தலைவர்களை அழைத்து வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த குடியரசு தினவிழாவுக்காக இந்தோனேஷியா அதிபர் பிரபோவா சுபியாண்டோவை இந்தியா அழைத்தது.
இந்தோனேஷியாவுக்கும், நம் நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக நல்ல உறவு என்பது உள்ளது. இதனால் தான் அவரை குடியரசு தினவிழாவுக்கு அழைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இந்தோனேஷியா அதிபர் நம் நாட்டின் குடியரசு தினவிழாவில் பங்கேற்க ஒப்புக்கொண்டார்.
அதுமட்டுமின்றி அப்படியே பாகிஸ்தான் அழைப்பை ஏற்று நம் நாட்டில் இருந்து நேரடியாக பாகிஸ்தானுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் செய்வதாகவும் அவர் முடிவு செய்தார். பாகிஸ்தானுக்கும், நமக்கும் மோதல் உள்ளதால் இந்தோனேஷியா அதிபர் நம் நாட்டில் இருந்து நேரடியாக பாகிஸ்தான் செல்வதை மத்திய அரசு விரும்பவில்லை. இதனால் இந்தோனேஷியா அதிபருக்கு பதில் வேறு தலைவரை அழைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதுபற்றி அறிந்த இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ எனக்கு பாகிஸ்தான் எல்லாம் முக்கியம் இல்லை. இந்தியா தான் முக்கியம் என்று கூறி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதன்மூலம் பாகிஸ்தான் முகத்தில் கரியை பூசிய பிறகு தான் இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நம் நாட்டுக்கு கம்பீரமாக என்ட்ரி கொடுத்து இன்றைய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
முன்னதாக இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஜனவரி 26ம் தேதி பாகிஸ்தான் வருவார் என்று அந்த நாட்டு அரசு நிகழ்ச்சி நிரலை தயாரிக்க தனிக்குழுவை அமைத்தது. ஆனால் இந்தோனேஷியா அதிபர் பாகிஸ்தானை மொத்தமாக புறக்கணித்து மூக்கை உடைத்துள்ளார். இன்று குடியரசு தினவிழா முடிவடைந்த நிலையில் இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இந்தியாவில் இருந்து இந்தோனேஷியா புறப்பட்டு செல்ல உள்ளார் னெ்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications