Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானின் மூக்கை உடைத்த இந்தியா.. இந்தோனேசியா அதிபரை வைத்து ‛மாஸ்’ சம்பவம்.. கொடி பறக்குதா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டுடன் மோதினால் என்ன நடக்கும்? என்பதை மீண்டும் பாகிஸ்தானுக்கு மத்திய அரசு உணர்த்தி உள்ளது. ஏற்கனவே அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரை வைத்து பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்த இந்தியா இப்போது இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியான்டோவை வைத்து மூக்கை உடைத்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

pakistan indonesia india

ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில அரசு சார்பிலும், மத்திய அரசு சார்பில் டெல்லியிலும் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். டெல்லியில் கொண்டாடப்படும் விழாக்களின்போது நம் நாட்டுடன் நெருக்கமாக இருக்கும் நட்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்படுவார்கள்.

அந்த வகையில் ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு மத்திய அரசு சார்பில் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியான்டோவை அழைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தோனேசியாவுக்கும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு என்பது உள்ளது. இதனால் தான் அவரை குடியரசு தினவிழாவுக்கு அழைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது.

ஆனால் திடீரென்று அதில் ஒரு சிக்கல் எழுந்தது. இந்த சிக்கலுக்கு காரணம் பாகிஸ்தான் தான். அதாவது இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியான்டோவை பாகிஸ்தானும் அதேநாளில் அழைத்து இருந்தது. இதனால் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியான்டோ ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுவிட்டு நேரடியாக பாகிஸ்தான் செல்வதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை இந்தியா விரும்பவில்லை. இதற்கு காரணம் என்னவென்றால் நம் நாட்டுடன் பாகிஸ்தான் மோதி வருகிறது. பயங்கரவாதிகளை வைத்து மிரட்டி வருகிறது. நம் நாட்டுக்கு சொந்தமான காஷ்மீருக்கு உரிமை கொண்டாடி வருகிறது. இப்படி தொடர்ந்து வம்பு செய்யும் பாகிஸ்தான் நாட்டுக்கு நம் நாட்டின் குடியரசு தினவிழாவை முடித்த கையோடு இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியான்டோ செல்வதை மத்திய அரசு விரும்பவில்லை.

இதனால் இந்தோனேசியா அதிபர் நம் நாட்டின் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற பிறகு பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு சார்பில் அந்த நாட்டுக்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பதில் இல்லாத நிலை இருந்தது. அதேவேளையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஜனவரி 26ல் இருந்து 3 நாள் பயணமாக அங்கு செல்லும் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியான்டோவை வரவேற்க தேவையான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.

இதுதொடர்பாக தனியாக கமிட்டி ஒன்றை அமைத்தார். பாகிஸ்தான் அரசின் திட்டமிடல் மற்றுமு் மேம்பாட்டு றை அமைச்சர் அசன் இக்பால் தலைமையில் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தோனேசியா அதிபர் பிரடோவோ சுபியான்டா உடனான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும் பணி உள்பட முன் ஏற்பாடுகளை இந்த கமிட்டி விறுவிறுப்பாக செய்ய தொடங்கியது. இதனால் இந்தோனேசியா அதிபர் பிரடோவோ சுபியான்டாவுக்கு பதில் மத்திய அரசு வேறு நாட்டு தலைவரை குடியரசு தினவிழாவுக்கு அழைப்பு விடுப்பது பற்றி ஆலோசனையை தொடங்கியது.

இந்நிலையில் தான் நம் நாட்டுக்கு குட்நியூஸ் ஒன்று வந்துள்ளது. அதோடு பாகிஸ்தானின் மூக்கு உடைப்பட்டுள்ளது. அதாவது நம் நாட்டின் குடியரசு தினவிழாவில் பங்கேற்பதாக இந்தோனேசியா அதிபர் பிரடோவோ சுபியான்டா தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, குடியரசு தினவிழாவுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டுக்கு அவர் செல்லவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டுக்கான 3 நாள் பயணத்தை இந்தோனேசியா அதிபர் பிரடோவோ சுபியான்டா ஒத்திவைக்கப்பட உள்ளதாம். இதையடுத்து நம் நாட்டின் குடியரசு தினவிழாவில் இந்தோனேசியா அதிபர் பிரடோவோ சுபியான்டா பங்கேற்பார் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. அதோடு நம் நாட்டுடன் மோதினால் என்ன நடக்கும் என்பதை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தானுக்கு உணர்த்தி உள்ளது.

இப்படி வெளிநாட்டு தலைவர்களை வைத்து பாகிஸ்தானுக்கு அடி கொடுப்பது நம் நாட்டுக்கு ஒன்றும் புதிது இல்லை. இதற்கு முன்பும் 2 முறை இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதாவது கடந்த 2010ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தார். அப்போது அவர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்தார். இந்த வேளையில் இந்தியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பாகிஸ்தான் செல்வதாக இருந்தது. ஆனால் இந்தியா அதனை விரும்பவில்லை. இதையடுத்து பராக் ஒபாமாவின் பாகிஸ்தான் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. 2011ம் ஆண்டு ஓராண்டு கழித்து பாகிஸ்தானுக்கு ஒபாமா வருவதாக அப்போது அறிவிக்கப்பட்டது. அதேபோல் பராக் ஒபாமா இந்தியா வந்துவிட்டு அப்படியே அமெரிக்கா சென்றார்.

மேலும் கடந்த 2019ம் ஆண்டு சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தொழிலதிபர்களுடன் இந்தியா வந்தார். அதற்கு முந்தைய வாரம் முகமது பின் சல்மான் 2 நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் செல்ல இருந்தார். ஆனால் இந்தியா அதனை விரும்பவில்லை. ஏனென்றால் அந்த ஆண்டில் தான் புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் 42 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகி இருந்தனர். இதற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தான் பொறுப்பு ஏற்று இருந்தது. இதுபற்றி அறிந்த சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ஒருநாள் ரத்து செய்து, வெறும் ஒருநாள் மட்டுமே அங்கு சென்றார். இதன் பின்னணியில் இந்தியா தான் இருந்தது.

இப்படியாக ஏற்கனவே அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரை வைத்து பாகிஸ்தானுக்கு அடி கொடுத்தது இந்தியா. இப்போது மீண்டும் இந்தோனேசியா அதிபர் பிரடோவோ சுபியான்டாவின் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வைத்து பாகிஸ்தானின் மூக்கை உடைத்துள்ளது இந்தியா. இதன்மூலம் பாகிஸ்தானை விட இந்தியா தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் இந்தோனேசியா இருப்பது உறுதியாகி உள்ளது.

மேலும் இதன் பின்னணியில் இன்னொரு முக்கிய விஷயமும் உள்ளது. அதாவது இந்தியா - இந்தோனேசியா இடையேயான உறவு என்பது தொடர்ந்து வலிமையாகி வருகிறது. இந்தியா - ரஷ்யா இணைந்து தயாரித்தள்ள பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தோனேசியா நம்மிடம் இருந்து வாங்க உள்ளது.அதேபோல் இந்தோனேசியாவின் அசி மகாணத்தின் சபாங்க் துறைமுக திட்டத்துக்கும் இந்தியா உதவி செய்ய முடிவு செய்துள்ளது. அதேபோல் கடந்த 2023ம் ஆண்டில் நம் நாட்டில் ஜி20 உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பாக செப்டம்பர் மாதம் 7 ம்தேதி இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் ஆசியன் இந்தயிா மாநாட மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அந்த சமயத்தில் இந்தோனேசியா அதிபராக இருந்தவர் ஜோகோவி இருந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு தான் இந்தோனேசியா அதிபராக பிரடோவோ சுபியான்டா பொறுப்பேற்றார். இவரும் முந்தைய அதிபர் ஜோகோவி போல் நம் நாட்டுடன் நல்லுறவை பேணிக்காக்க விரும்புகிறார். இதற்கு முன்னோட்டாக கடந்த 2024ம் ஆண்டில் நவம்பர் 18 ம் தேதி பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனிரோ நகரில் ஜி20 உச்சி மாநாடு நடந்தது. அப்போது பிரதமர் மோடியுடன் பிரடோவோ சுபியான்டா சந்தித்தார். இருதரப்பு உறவுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது இந்தியா மற்றும் பிரதமர் மோடியின் நட்புக்காக குடியரசு தின நாளில் பாகிஸ்தான் செல்லும் முடிவை இந்தோனேசியா அதிபர் பிரடோவோ சுபியான்டா தள்ளிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+