சிந்து நதிநீர் இனி பாகிஸ்தான் போகுமா? ஜெய்சங்கர் விளக்கம்! நேருவின் தவறை மோடி சரிசெய்துவிட்டாராம்
டெல்லி: பாகிஸ்தான் தனது பயங்கரவாதிகளுக்கு கொடுக்கும் ஆதரவை கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். பாகிஸ்தானின் பஞ்சாபின் நலனை கருத்தில் கொண்டு போடப்பட்ட இந்த ஒப்பந்தம் நம் நாட்டின் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நமது சொந்த விவசாயிகளின் நலன்களை பார்க்கவில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி உள்ளதன் மூலம் நேரு அரசின் தவறை பிரதமர் மோடி அரசு சரி செய்துள்ளது.'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 2 நாட்கள் ‛ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள், பிரதமர் மோடி பதிலளித்தனர்.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தனர். எதிர்க்கட்சிகள் சார்பில் கனிமொழி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்பட பல எம்பிக்கள் கேள்விகளை கேட்டனர்.
இதையடுத்து ‛ஆபரேஷன் சிந்தூர்' குறித்த விவாதம் இன்று ராஜ்யசபாவில் தொடங்கிது. மதியம் 12 மணிக்கு விவாதம் தொடங்கியது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விவாதத்தை தொடங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த தாக்குதலுக்கு அனைத்து நாடுகளும் இந்தியாவுடன் துணை நிற்பதாக கூறியது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்
கடந்த ஏப்ரல் 22ம் தேதி தாக்குதல் நடந்த மறுநாளே சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அமைச்சரவை கூடி இந்த முடிவுகளை எடுத்தது. பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது மிகவும் முக்கிய நடவடிக்கையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சொன்னதை இங்கு ஒருமுறை சொல்லி கொள்ள விரும்புகிறேன். ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது என சொல்லி கொள்கிறேன்.
நேரு செய்த தவறு
பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றி பயங்கரவாதிகளுக்கு கொடுக்கும் ஆதரவை கைவிடும்வரை சிந்து நதி நீரை அந்த நாட்டுக்கு வழங்க முடியாது. பாகிஸ்தானின் பஞ்சாபின் நலன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த ஒப்பந்தத்தை செய்வோம் என்று அப்போதைய பிரதமர் கூறினார். அந்த சமயத்தில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நமது சொந்த விவசாயிகளின் நலன்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை.
ஒரு நாட்டின் பிரதான நதிகள் முழுவதுமாக பக்கத்துக்கு நாட்டுக்கு பலனளிக்கும் ஒப்பந்தம் எந்த நாட்டிலும் இருந்தது இல்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி உள்ளதன் மூலம் நேரு அரசின் தவறை பிரதமர் மோடி அரசு சரி செய்துள்ளது.'' என சாடினார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது என்ன?
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான தண்ணீர் பங்கீட்டு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் கடந்த 1960ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன. நம் நாட்டின் சார்பில் அப்போதைய பிரதமர் நேரு, பாகிஸ்தான் சார்பில் அப்போதைய அதிபர் அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டன. உலக வங்கியின் மத்தியஸ்த்தில் நடந்த இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன. ஆனால் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.
22 கோடி பேர் பாதிப்பு
பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சிந்து நதிநீர் என்பது மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் 22 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த சிந்து நதிநீரை நம்பித்தான் உள்ளனர். விவசாயம், குடிநீருக்கு இதனை தான் பயன்படுத்தி வருகின்றன. தற்போது சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் மீண்டும் ஜெய்சங்கர் அதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications