Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தான் பஞ்சத்தில் அடிபட போகுது.. உறுதியாக இருக்கும் இந்தியா.. வெளியுறவுத்துறை அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது நிறுத்தியது தான். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை விடும்வரை சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் இடைநிறுத்தம் அமலில் இருக்கும் என மத்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்பதன் மூலம் நம் நாடு பதிலடி கொடுத்தது. 9 பயங்கரவாத முகாம்கள், முக்கிய விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டது.

indus-waters-treaty-on-hold-till-pakistan-stops-supporting-cross-border-terrorism-says-mea-spokespe

நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதன்பிறகு பாகிஸ்தான் நம்மிடம் பணிந்து சண்டை நிறுத்தம் செய்ய கோரிய பிறகு மோதல் முடிவுக்கு வந்தது.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நம் நாடு பாகிஸ்தானுக்கானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. கடந்த 1960ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன. உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் நடந்த இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன.

ஆனால் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. அதாவது ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் அதில் உள்ளது போல் பாகிஸ்தானுக்கு நம் நாடு தண்ணீர் என்பது வழங்க வேண்டி இருக்காது. ஆனால் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சிந்து நதிநீர் என்பது மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் 22 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த சிந்து நதிநீரை நம்பித்தான் உள்ளனர். விவசாயம், குடிநீருக்கு இதனை தான் பயன்படுத்தி வருகின்றன. தற்போது சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‛‛பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிந்து நதி நீர் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறாரே'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ரன்தீர் ஜெய்ஸ்வால், ‛‛சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பொறுத்தவரை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிட வேண்டும். அதனை கைவிடும்வரை சிந்து நதிநீர் இடைநிறுத்தம் அமலில் இருக்கும். பாகிஸ்தானிடம் வழங்கப்பட்ட பட்டியலில் உள்ள பயங்கரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த பயங்கரவாதிகளை ஒப்படைப்பது மற்றும் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி நடைபெறும். பிரதமர் மோடி ஏற்கனவே பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக மேற்கொள்ள முடியாது. தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக இருக்காது என்று கூறியிருந்தார்.

இதன்மூலம் பாகிஸ்தான் பஞ்சத்தில் அடிபடப்போவது உறுதியாகி உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் மக்கள்தொகை என்பது 25 கோடி என்று இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் சிந்து நதிீநீர் ஒப்பந்தத்தை நிறுத்தும்போது 22 கோடி பேர் பாதிக்கப்பட உள்ளனர். கிட்டத்தட்ட மொத்த நாட்டு மக்களும் பாதிக்கப்பட உள்ளனர். ஏனென்றால் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சிந்து நதிநீர் என்பது மிகவும் முக்கியமானது. அந்த நாட்டு மக்களின் உயிர்நாடியாக இதுதான் இருந்து வருகிறது.

பாகிஸ்தானில் 16 மில்லியன்(ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) ஹேக்டர் பரப்பு விவசாயம் ( நாட்டின் 80 சதவீத விவசாயம்) இந்த சிந்து நதிநீரை நம்பித்தான் நடக்கிறது. இந்த தண்ணீரில் 93 சதவீதம் பாசனத்துக்காக பயன்படுத்தப்படகிறது. லாகூர், முல்தான், கராச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு ஓடும் ஆறுகளுக்கு சிந்து நதிநீரில் இருந்து தான் தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த நகரங்களும் பாதிக்கபப்ட உள்ளது. அதேபோல் தர்பேலா, மங்களா நீர்மின் உற்பத்தி நிலையங்களும் பாதிக்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+