தண்ணீர் இல்லாமல் தடுமாறும் பாகிஸ்தான்.. இதே நிலை நீடித்தால் சாப்பாடே கிடைக்காது.. கதறும் பாக்.!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் முழுக்க தண்ணீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. ஒட்டுமொத்த பாகிஸ்தானும் நீர் எப்போது கிடைக்கும் என்ற பயத்தில் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒரு பகுதியாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் மூலம் சிந்து நதிகளின் கண்ட்ரோல் இந்தியாவுக்கு முழுமையாக வந்துள்ளது.. இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகே நீரைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

Indus Waters Treaty Suspended Pakistan Faces Severe Water Crisis as India Sets Limits

தண்ணீர் பஞ்சம்

இதனால் பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் பீதியில் இருக்கிறது. மேலும், இப்போது பாகிஸ்தானுக்கு வேறு ஆப்ஷன்கள் எதுவும் இல்லை என்பதே உண்மை. பயங்கரவாதமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்பதில் இந்தியா மிகத் தெளிவாக இருக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிராகப் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் கூட பல்வேறு இடங்களில் இதே கருத்தைத் தான் கூறியிருக்கிறார்.

இந்தியா இந்த நிலைப்பாட்டில் திட்டவட்டமாக இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் உண்மையில் பயந்து போய் இருக்கிறது. தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பாகிஸ்தான் பஞ்சாப் பிராந்தியத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அங்கு வேளாண் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது.

அதிகாரிகள் சொல்வது என்ன!

இது தொடர்பாக பாக். பஞ்சாப் மாகாணத்தின் விவசாய மற்றும் நீர் மேலாண்மைத் துறை இயக்குநர் ரானா ஜமால் ஹுசைன் கூறுகையில், "சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நீர் வரத்துக் குறையும். சுமார் 20% வரை கூட நீர் வரத்து உடனடியாக குறையும் என எதிர்பார்க்கிறோம். இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

ஏனென்றால் பாக். பஞ்சாபின் விவசாயம் சினாப் நதியையே பிரதானமாக நம்பி இருக்கிறது. எங்களுக்கு வரும் நீரில் சுமார் 80% சினாப் நதியிலிருந்தே வருகிறது.. எனவே, நீர் வரத்து குறைந்தால் அது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் விவசாயத்தை நேரடியாகவே பாதிக்கும்" என்றார்.

இந்தியா திட்டவட்டம்

தீவிரவாதத்திற்கு எதிராகப் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் நீரைத் திறந்துவிடுவதால் இந்தியாவுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை. ஆனால், பாகிஸ்தான் மறைமுகமாகத் தீவிரவாதத்தை ஆதரிப்பதாலேயே இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

பெரிய சிக்கல்

இது தொடர்பாகப் பாகிஸ்தான் பஞ்சாப் விவசாயிகள் கூறுகையில், "இந்தியா தண்ணீரை நிறுத்தினால் மட்டுமில்லை.. தாமதப்படுத்தினால் கூட அது எங்களுக்குச் சிக்கல்தான். பயிர்களைத் திட்டமிட்டபடி வளர்க்க முடியாது. திடீரென நீர் திறந்துவிடப்பட்டால் அது வெள்ளம் போல வயல்களை மூழ்கடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் நாம் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. இதே நிலை நீடித்தால் உணவுக்கே கூட சிக்கல் ஏற்படும்.

ஒரு தெளிவு இல்லாததால் நடவு செய்ய முடியாமல் தவிக்கிறோம். தண்ணீர் திறக்கும் நேரம் சிறிதளவு தாமதம் ஆனாலும் கூட அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்படும். அது எங்கள் திட்டத்தை மொத்தமாகச் சீர்குலைக்கும். இப்போது நெல் பருவம் தொடங்க உள்ளது. நெல்லுக்கு எப்போதும் அதிகளவில் தண்ணீர் தேவை. ஆனால், நீர் எப்போது வரும் என்றே தெரியாத சூழல் இருப்பதால் குழப்பத்தில் இருக்கிறோம்" என்றார்.

கதறும் பாகிஸ்தான்

சிந்து நதி நீர் கிடைக்காமல் பாகிஸ்தான் ஏற்கனவே பதற ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாகவே ஈரான் சென்றிருந்த அந்நாட்டின் பிரதமர் ஷெரீப், அங்கிருந்தபடி பேச்சுவார்த்தைக்குத் தயார் எனக் கோரிக்கை விடுத்தார். ஆனாலும், இந்தியா தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு பிறகே எந்தவொரு பேச்சுவார்த்தையும் இருக்கும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+