"பணவீக்கம் + விலைவாசி உயர்வு.." பாஜகவுக்கு தேர்தலில் விழ போகும் அடி? பரபரக்கும் புதிய சர்வே
டெல்லி: விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இதை மக்கள் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதுவது சிஎஸ்டிஎஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அது வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

சர்வே: இதற்கிடையே சிஎஸ்டிஎஸ் என்ற அமைப்பு நாடு முழுக்க சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. அதில் பொதுமக்கள் பல்வேறு கேள்விகள் குறித்து பதிலளித்துள்ளனர். இத்த சர்வே நாடு முழுக்க 19 மாநிலங்களில் 100 லோக்சபா தொகுதிகளில் நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்த சர்வேபடி வேலையின்மை தான் முக்கிய பிரச்சினையாக இருப்பதாகப் பொதுமக்கள் கூறியுள்ளனர். அதேபோல வேலையின்மைக்கு அடுத்து பணவீக்கமும் முக்கிய பிரச்சினையாக இருப்பதாகப் பொதுமக்கள் கூறுகிறார்கள்.
யார் பொறுப்பு: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியது யார் பொறுப்பு என்ற கேள்விக்கு 26 சதவீதம் பேர் மத்திய அரசைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதேநேரம் 12 சதவீதம் பேர் மாநில அரசுகளைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இருப்பினும், பெரும்பாலான மக்கள் அதாவது சுமார் 56 சதவீதம் பேர் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதற்கு மத்திய அரசு மாநில அரசு என இரு தரப்புமே பொறுப்பு என்று கூறுகிறார்கள்.

பெரும்பாலான மக்கள் தங்கள் செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கருதுகிறார்கள். சுமார் 71 சதவீதம் பேர் பொருட்களின் விலைவாசி ஓவராக அதிகரித்துள்ளதாகக் கருதுகிறார்கள். இந்த விலைவாசி உயர்வு என்பது சாதி மத பேதம் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தான் அதிகம் பாதிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை அதிகபட்சமாக 76 சதவீதம் வரை பாதிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் (76 சதவீதம்), மற்றும் பட்டியலினத்தவரும் (75 சதவீதம்) கூட விலைவாசி உயர்வு அதிகம் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கைத் தரம்: ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்தவரை, சுமார் 48 சதவீதம் பேர் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். அதேநேரம் 35 சதவீதம் பேர் கடந்த ஐந்தாண்டுகளில் வாழ்க்கைத் தரம் மோசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். வெறும் 22 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் வீட்டு வருமானத்தில் இருந்து ஒரு பகுதியைச் சேமிக்க முடிவதாகத் தெரிவித்துள்ளனர். 36 சதவீதம் பேர் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தாலும் கூட சேமிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.
ராமர் கோயில்: இந்த ஆய்வில் ராமர் கோயில் குறித்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதில் மோடி அரசு செய்தவற்றில் முக்கியமான ராமர் கோயில் கட்டியது என்று 22% பேர் கூறுகிறார்கள். மேலும், ராமர் கோயில் இந்து அடையாளத்தைக் காக்க உதவும் என 22% பேர் கூறியுள்ள நிலையில், அது இந்து அடையாளங்களை ஒருங்கிணைக்கும் என்று கணிசமான அளவில் மக்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக உயர் சாதியினருடைய ராமர் கோயிலுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. நகர்ப்புறம் கிராமப்புறம் என இரண்டிலும் ஆதரவு கிட்டதட்ட ஒரே அளவுக்கு இருக்கிறது. நாட்டின் கிழக்கு மற்றும் தென்னிந்திய மக்களைவிட, வட மற்றும் மேற்கு இந்திய மக்கல் ராமர் கோயிலை அதிகம் கொண்டாடுகிறார்கள் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications