Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ளம் வடிந்ததும் சேதங்களுக்கான காப்பீட்டுத்தொகை பெற சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு வரலாறு காணாத வகையில் இருந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பேய்மழை பெய்தது. தாமிரபரணியில் ஒன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் பாய்ந்ததால் ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் கடுமையாக பாதித்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளன. மழை நின்று நான்கு நாட்கள் ஆகியும், இன்னமும் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. இந்த மழை மற்றும் வெள்ளத்தால், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள், வர்த்தகர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளார்கள்.

Insurance Special camps will be set up in Nellai, Thoothukudi , Thenkasi and Kanyakumari : Nirmala Sitharaman

இந்த பாதிப்பு குறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கான காப்பீட்டு தொகையை பெறுவதற்காக அந்தந்த மாவட்டங்களில் வெள்ளம் வடிந்த பின்னர் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்றார்

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், தமிழ்நாட்டில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பொருட்கள், சொத்துகள் சேதம் அடைந்திருக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும், பொருட்சேதம் ஏற்பட்டவர்களின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் ஒரு வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது. இதனால் தண்ணீர் தேங்கி, வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இந்த வெள்ள பாதிப்பு குறித்த தகவல் கடந்த டிசம்பர் 18-ந்தேதி காலை எனக்கு கிடைத்தது. அன்று நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தது. நான் அன்று மதியமே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் உடனடியாக உதவிகள் செய்யுமாறு வேண்டுகோள் வைத்தேன்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனே மீட்புப்படைகளை அனுப்புதல் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஒத்துழைத்து உடனடியாக களத்தில் இறங்கின. உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறைகள் நிலைமையை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். விமானப்படையின் 5 ஹெலிகாப்டர்கள், கடற்படை ஹெலிகாப்டர்கள், கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் 87 முறை சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கின்றன.

இவ்வாறு அனைத்து மீட்புபடைகள் மூலமாகவும் டிசம்பர் 21-ம் தேதி வரை 42 ஆயிரத்து 290 பேர் மீட்கப்பட்டனர். உடனே களத்தில் இறங்கியதால் நிறைய பேரை மீட்க முடிந்தது. ஆனாலும் இந்த பேரிடரில் 31 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். இது வருத்தமான விஷயம். பொதுவாக, அவசர நிலைமை இயல்புக்கு வந்தபிறகே மத்தியக்குழு அந்த இடத்திற்கு செல்லும். ஆனால் இந்த விஷயத்தில் 19-ந்தேதி மாலையே மத்தியக்குழு அங்கு சென்றுவிட்டது. முன்னதாக 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மத்தியக்குழு சென்னையில் இருந்தது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழையால் 73,574 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. 35,796 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் கடுமையாக சேதமடைந்திருக்கின்றன. தென் மாவட்டங்களில் வெள்ளம் வடிந்ததும் சேதங்களுக்கான காப்பீடு தொகையை வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.

அண்மையில் இந்திய பொது காப்பீடு கவுன்சிலின் கீழ் உள்ள 19 நிறுவனங்கள் கடந்த 20 மற்றும் 21-ந்தேதிகளில் அம்பத்தூரில் சிறப்பு முகாம் நடத்தின. இதில் மிக்ஜம் புயலில் பாதிக்கப்பட்ட தொழில்துறையினருக்கு முகாமிலேயே காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டன. அதைப்போல இந்த மாவட்டங்களிலும் சேதங்களுக்கான காப்பீட்டுத்தொகை வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசால பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு தனது பங்கை உரிய நேரத்துக்கு வழங்க வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி ரூ.813.15 கோடி தமிழ்நாடு அரசிடம் இருந்தது. இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் பங்கு ரூ.900 கோடியில் முதல் தவணை ரூ.450 கோடி, மிக்ஜாம் புயல் வருவதற்கு முன்பே மாநிலத்துக்கு அளித்துவிட்டோம். இதேபோல் தென் மாவட்டங்களில் மழை வருவதற்கு முன்பே அதாவது கடந்த 12-ந்தேதியே இரண்டாவது தவணையும் கொடுத்து விட்டோம்" இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+