நிர்மலா சீதாராமன்-பிடிஆர் சந்திப்பு..தமிழகத்துக்கு வட்டியின்றி ரூ.3500 கோடி கடன் வழங்கிய மத்திய அரசு
டெல்லி: தமிழகத்துக்கு 50 ஆண்டு வட்டியில்லா திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது என்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பிறகு தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். மேலும் சந்திப்பில் நடந்த விவாதங்கள் பற்றி அவர் விளக்கினார்.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
டெல்லியில் நார்த் ப்ளாக்கில் உள்ள நிதியமைச்சகம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பிறகு நிர்மலா சீதாராமன் உடனான சந்திப்பு பற்றி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
ஜிஎஸ்டி கவுன்சில் விதிகள்படி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 3 மாதத்துக்கு ஒருமுறை நடத்தப்பட்ட வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் மதுரையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் முடிந்தும் இந்த கூட்டம் நடக்கவில்லை. இந்த கூட்டத்தை மதுரையில் நடத்துவது பற்றி விவாதித்தேன். இன்னும் தேதி குறிப்பிடவில்லை. ஆனாலும் விரைவில் அடுத்த கூட்டம் மதுரையில் உறுதியாக நடக்கும்.

சென்னை 2ம் கட்ட மெட்ரோ திட்டம்
மேலும் தமிழ்நாட்டின் பல திட்டங்கள், கணக்குகள் பற்றி நேற்று அதிகாரிகளிடம் இன்று மத்திய நிதி அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட பணிக்காக ஜைக்கா, ஏடிபி, எஐபிஐ நிறுவனங்களில் இருந்து பெறக்கூடிய கடனுக்கான அடிப்படை பத்திரங்கள் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இதனை அவசரமாக ஒப்புதல் அளிக்க கோரினோம். இந்த விஷயத்தில் சில விளக்கங்களை கேட்டனர். அதனை 2 நாட்களுக்கு முன்பு கொடுத்து இருந்தோம். தற்போது இந்த மாத இறுதிக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம் 2ம் கட்ட திட்டத்துக்கான கடனை விரைவாக பெற முடியும்.

ரூ.3,500 கோடி வட்டியில்லா கடன்
அதோடு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு லட்சம் கோடி வரை 50 ஆண்டு வட்டியில்லா கடன் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழகத்தின் பல துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் செய்யப்பட்டு இருந்தது. இதுவரைக்கும் நிதி எதுவும் வராத நிலையில் நேற்று 3,500 கோடி ரூபாய் வட்டியில்லா கடனை விடுவித்துள்ளனர். அதன்படி ஆப்டிக்கல் பைபர் கேபிள் திட்டத்துக்கு ரூ.194 கோடி, ஊரக நெடுஞ்சாலை துறைக்கு ரூ.3,263 கோடி எனவும் இதுமட்டுமின்றி பிற திட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் டேட்டா கேட்பு
மேலும் வருமானவரி மற்றும் இபிஎப்ஓ டேட்டாக்கள் கொடுக்கும்படி மத்திய அரசிடம் கேட்டு இருந்தோம். தமிழகத்தில் கடன் தள்ளுபடி, பிற திட்டங்களில் தமிழக மக்கள் எந்த நிலையில் உள்ளனர் என்பதை அறிந்து திட்டங்கள் செயல்படுத்த வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் கேட்டு இருந்தோம். இதுபற்றி பட்ஜெட்டிலேயே குறிப்பிட்டு இருந்தேன். வருமான வரித்துறையில் இருந்து கர்நாடகத்துக்கு டேட்டா ரீலிஸ் செய்தனர். அதேபோல் தமிழகத்துக்கும் வருமான வரி மற்றும் இபிஎப்ஓ டேட்டாக்களை வழங்க கேட்டேன். தருவதாக கூறியுள்ளார்.

மதுரையில் நைமர் ஆய்வு மையம்
மதுரையில் நைபர் (national institute of pharmacology and research) திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு இதில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுபற்றி கேட்டபோது நைபர் திட்டம் அமலில் இல்லை என்றார். இதனால் நைமர் (National Institute of Medical Equipments research) திட்டத்தில் ஆய்வு மையத்தை மதுரைக்கு ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளேன். மதுரையில் ஏய்ம்ஸ் வரும் நிலையில் இது பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications