இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து!
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக சர்வதேச பயணிகள் விமானங்களின் சேவை ரத்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச் 23 முதல் சர்வதேச பயணிகள் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சிறப்பு சர்வதேச விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மே முதல் மற்றும் ஜூலை முதல் குறிப்பிட்ட நாடுகளுடன் இருதரப்பு 'வான்வழி சேவை'கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூட்டான் மற்றும் பிரான்ஸ் உட்பட சுமார் 18 நாடுகளுடன் இந்தியா வான்வழி சேவைக்கு ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான ஒரு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தின் கீழ், சிறப்பு சர்வதேச விமானங்களை அந்தந்த நாடுகளிளில் உள்ள முக்கிய நகரங்களுக்கு விமான நிறுவனங்கள் இயக்க முடியும்.
இந்நிலையில் இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களின் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது நவம்பர் 30 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சில நாடுகளை தவிர மற்ற நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படாது. அரசு அனுமதித்த வழித்தடங்களில் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் தனது சுற்றறிக்கையில் சர்வதேச அளவில் அனைத்து சரக்கு விமான சேவைகள் மற்றும் சரக்கு சேவைக்காக அங்கீகரிக்கப்பட்ட விமானங்களின் செயல்பாடு பாதிக்கப்படாது என்றும் வழக்கம் போல் சரக்கு விமானங்கள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட போதிலும், உள்நாட்டு விமான சேவைகள் கடந்த மே 25ம் தேதி முதல் தொடர்ந்து நாடு முழுவதும் இயக்கப்படுகிறது.
-
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில்












Click it and Unblock the Notifications