யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை - ஜம்மு காஷ்மீரில் முடக்கப்பட்ட இணையதள சேவை
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதக் குழு தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவைகள் அம்மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதக் குழு தலைவரான யாசின் மாலிக் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமைதியை சீரழித்தது, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியது, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளி
இந்த வழக்குகள் டெல்லியில் இருக்கும் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. 3 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து கடந்த 19 ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அதில், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வசூலித்ததாக என்.ஐ.ஏ. தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பு வெளியானது.

தூக்கு தண்டனை வழங்க கோரிக்கை
யாசின் மாலிக்கிற்கான தண்டனை விபரம் மே 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்.ஐ.ஏ. நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இதனிடையே யாசின் மாலிக்கிற்கு அதிபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என என்.ஐ.ஏ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தன்மீதான குற்றங்களை இந்திய உள்துறை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகி, தூக்கு தண்டனையை ஏற்கிறேன் என யாசின் மாலிக் தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

ஆயுள் தண்டனை
இந்த நிலையில் இன்று மாலை யாசின் மாலிக்கிற்கான தண்டனை விபரத்தை டெல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பால் ஜம்மு காஷ்மீர் வன்முறை நிகழலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இணைய சேவை துண்டிப்பு
உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், என்.ஐ.ஏ. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான கருத்துக்களை கட்டுப்படுத்தவும் அங்கு இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications