பைலட் கிரிக்கெட் பார்த்தது தான் ரயில் விபத்துக்கு காரணமா? அஸ்வினி வைஷ்ணவ் கூறியது பொய்யா? பரபர தகவல்
டெல்லி: கடந்த ஆண்டு ஆந்திராவில் ஏற்பட்ட பலாசா ரயில் விபத்திற்கு, ரயிலை இயக்கிய லோகோ பைலட்தான் காரணம் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார். இந்நிலையில், ரயில்வே துறை மேற்கொண்ட விசாரணையில் அமைச்சர் கூறியது உண்மையில்லை என்று தெரிய வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப நாட்களாக ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இதனையடுத்து ஆந்திராவில் நடைபெற்ற விபத்து 17 உயிர்களை பலி வாங்கியது. ஆந்திராவின் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் அக்.29ம் தேதியன்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது.

ரயில் பாதையின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக அந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த கொடூர விபத்தில் 3 பாசஞ்சர் ரயில் பெட்டிகள் தாறுமாறாக தூக்கி எறியப்பட்டன. இதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர். இதில் பலாசா எக்ஸ்பிரஸை இயக்கிய லோகோ பைலட்டுகள் இருவரும் உயிரிழந்தனர்.
ஒடிசா விபத்துக்கு பின்னர் அடுத்தடுத்து நடந்த விபத்துகள் மத்திய ரயில்வே துறை மீது பெரும் அதிருப்தியை உருவாக்கியது. குறிப்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மீது தொடர் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில், ஆந்திராவில் நடந்த விபத்து ரயில்வே அமைச்சகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. விபத்து குறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்த கருத்து விவாதங்களை ஏற்படுத்தியது.
அதாவது, "பலாசா எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய லோகோ பைலட்டுகள் இருவரும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்ததால், இரண்டு சிக்னல்கள் பழுதாகி இருந்ததை கவனிக்காமல் வேகமாக ரயிலை இயக்கியுள்ளனர். அதனால்தான் கட்டுப்பாட்டை மீறி ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் விசாரணையில் பலாசா எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய லோகோ பைலட்டுகள் கிரிக்கெட் பார்த்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது லோகோ பைலட்டுகளின் மொபைல் டேட்டா பயன்பாடுகளை ஆராய்ந்தபோது இந்த விஷயம் வெளி வந்திருக்கிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications