விடாது விரட்டும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
2007ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிமுறைகளுக்கு மாறாக ரூ.305 கோடி அன்னிய முதலீடுக்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு, மே 15ம் தேதி சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையேற்று இன்று மதியம் 2 மணியளவில் சிதம்பரம் டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்.
கடந்த வருடம், டிசம்பர் 19ம் தேதி, சிதம்பரம் இங்கு நேரில் ஆஜராகி, அதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளித்தார். சுமார் 8 மணி நேரம் அந்த விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், ஜனவரி 7ம் தேதியும் இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன்னிலையில் சிதம்பரம் ஆஜரானார். இன்று மீண்டும், சிதம்பரத்திடம் விசாரணை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications