இதெல்லாம் செய்தால்.. பெயில் உடனே கேன்சல்.. கவனம்.. ப. சிதம்பரத்திற்கு 5 நிபந்தனைகள்!
ஐஎன்எக்ஸ் வழக்கில் ஜாமீன் பெற்று இருக்கும் ப. சிதம்பரத்திற்கு பின் வரும் ஐந்து நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்து இருக்கிறது.
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் வழக்கில் ஜாமீன் பெற்று இருக்கும் ப. சிதம்பரத்திற்கு பின் வரும் ஐந்து நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்து இருக்கிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இன்று பிற்பகல் ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்து வெளியே வருகிறார். இதன் மூலம் 106 நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வருகிறார்.

ஐஎன்எக்ஸ் வழக்கில் ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி மற்றும் நீதிபதிகள் ஏ எஸ் போபன்னா, ஹிரிஷிகேஷ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் ஜாமீன் பெற்று இருக்கும் ப. சிதம்பரத்திற்கு பின் வரும் ஐந்து நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்து இருக்கிறது.
அதன்படி ப. சிதம்பரம் 2 லட்சம் ரூபாய் வரை பாண்ட் செலுத்த வேண்டும், 2 பிணைகள் அவர் அளிக்க வேண்டும்.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் சாட்சிகளை கலைக்க சிதம்பரம் முயற்சிக்கக் கூடாது. ஆதாரங்களை திரட்ட முயல கூடாது. சாட்சிகளை சந்திக்க கூடாது.
தன்னுடைய பாஸ்போர்ட்டை அவர் உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வேறு நாடுகளுக்கு உச்ச நீதிமன்ற அனுமதி இன்றி பயணம் மேற்கொள்ள கூடாது.
ஐ.என்.எக்ஸ் வழக்கு குறித்து சிதம்பரம் பத்திரிக்கைகளில் பேட்டி அளிக்கவும் அறிக்கைகள் வெளியிடவும் கூடாது.
எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் அவர் விசாரணைக்கு வர வேண்டும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications