8 கிலோ எடை குறைந்து.. அதே கெட்டப்பில் வெளியே வந்த ப.சிதம்பரம்.. திகார் வாசலில் என்ன சொன்னார்?
நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் முறையாக வைக்கப்படவில்லை என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
Recommended Video
டெல்லி: நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் முறையாக வைக்கப்படவில்லை என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
ஒரு வழியாக பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு ப. சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
நேற்று இரவு இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். மொத்தமாக 106 நாட்கள் அவர் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி வந்தார்
இந்த நிலையில் ப. சிதம்பரம் நேற்று இரவு சிறையில் இருந்து வெளியே வரும் போது, அதே வெள்ளை வேட்டி, சட்டையில் வெளியே வந்தார். முகம் கொஞ்சம் பொலிவு இழந்து காணப்பட்டது. அவரின் எடையும் ஜெயில் காரணமாக எட்டு கிலோ குறைந்து இருந்தது.

சிரிப்பு
தொடர் உடல் நல குறைப்பாடு காரணமாக அவர் கொஞ்சம் சோம்பலாக இருந்தார். ஆனாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடியே வெளியே வந்தார். அங்கு கூடி இருந்த காங்கிரஸ் தொண்டர்களை பார்த்து கை அசைத்தார்.

என்ன பேசினார்
அதன்பின் அங்கிருந்த சில செய்தியாளர்களிடம் நடந்து கொண்டே பேசினார். இவ்வளவு நாள் சிறையில் இருந்தேன். இப்போது சுதந்திர காற்றை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வளவு நாள் ஜெயிலில் என்னை விசாரித்தார்கள். ஆனால் எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் அவர்களால் வைக்க முடியவில்லை, என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.

என்ன நிபந்தனை
ப. சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேச கூடாது என்று நிபந்தனை இருக்கிறது. இதனால் நேற்று அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் அளிக்கவில்லை. ஆனாலும் அவரின் இந்த பதில் அமலாக்கத்துறை தரப்பை கொஞ்சம் எரிச்சல் அடைய வைத்துள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications