ப்பா என்ன மாதிரியான ஆர்டர்.. ஐபிஎல் ஏலம் மூலம் மாஸ் பலம் பெற்ற குட்டி அணி.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2022 ஐபிஎல் ஏலத்தை தொடர்ந்து முக்கியமான அணி ஒன்று இந்த தொடரில் புதிய பலம் பெற்றுள்ளது.

2022 ஐபிஎல் ஏலம் இரண்டாவது நாளாக இன்றும் நடந்து வருகிறது. நேற்று டாப் வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று வெளிநாட்டு வீரர்கள், இந்திய அணியில் ஆடாத வீரர்கள், ஆல் ரவுண்டர்கள் ஏலம் விடப்பட்டு வருகிறார்கள். இன்றைய ஏலத்தில் ஆரோன் பின்ச், டேவிட் மலான், புஜாரா போன்ற வீரர்கள் ஏலம் எடுக்கப்படவில்லை.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் ஏலத்தில் பஞ்சாப் அணி மிக சிறப்பாக ஏலம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 3 சீசன்களாக பஞ்சாப் அணி சரியாக ஆடவில்லை. அஸ்வின் கேப்டன்சி கீழ் கொஞ்சம் நன்றாக ஆடிய பஞ்சாப் அணி ராகுல் கேப்டன்சி கீழ் மிக மோசமாக சொதப்பியது. அதிலும் 2020 தொடரில் பஞ்சாப் அணி டேபிளில் கடைசி இடத்தை பிடித்தது.

மோசமான வீரர்கள்

மோசமான வீரர்கள்

பஞ்சாப் அணியின் ஓப்பனிங்கை தவிர்த்து அவர்களின் பேட்டிங் சரியாக இல்லை. கடந்த முறை பஞ்சாப் அணி ஷாருக்கானை எடுத்த பின் அந்த அணியின் பினிஷிங் சிறப்பாக இருந்தது. ஆனாலும் மிடில் ஆர்டர் சொதப்பியது. பவுலிங் கிங் ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் ஆகியோர் இருந்தனர். ஆனாலும் பவுலிங்கில் வேறு யாரும் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. இதனால் பஞ்சாப் அணியை கடந்த 4 வருடமாக கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வந்தனர்.

ஐபிஎல் பஞ்சாப்

ஐபிஎல் பஞ்சாப்

ஆனால் இந்த வருடம் பஞ்சாப் அணி மிக சிறப்பான அணியை உருவாக்கி உள்ளது. தொடக்கத்தில் இருந்தே சிறப்பான வீரர்களை தேடி தேடி ஏலம் எடுத்து வருகிறது. தொடக்கத்திலேயே தவானை பஞ்சாப் ஏலம் எடுத்தது. 8.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் இவரை எடுத்துள்ளது. பெரும்பாலும் இவர் பஞ்சாப் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

இது போக இரண்டாவது ஒப்பனராக ஏற்கனவே மயங்க் அகர்வால் உள்ளார். ஒன் டவுன் இறங்கும் வகையில் ஏற்கனவே பிரைஸ்டோவை பஞ்சாப் 6.75 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இதனால் டாப் 3 பேர் அந்த அணிக்கு சிறப்பாக செட்டாகி உள்ளனர். இது போக பக்கா ஆல் ரவுண்டரான இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டோனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 11.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சமீபத்தில் கலக்கி வருகிறார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

இது போக அணியில் மிடில் ஆர்டர் ஆட மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஓடியன் ஸ்மித்தை பஞ்சாப் அணி ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் சென்னைக்கு பிராவோ, மும்பைக்கு பொல்லார்ட் போல பஞ்சாப் அணிக்கு செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு எதிராக கடந்த ஒருநாள் தொடரில் இவர் சிறப்பாக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் அந்த அணிக்கு முக்கியமான வீரராக இருப்பார்.

 பினிஷிங்

பினிஷிங்

இது போக நேற்று ஷாருக்கானை பஞ்சாப் அணி 9 கோடி கொடுத்து எடுத்தது. இவர் சிறப்பாக பினிஷிங் செய்ய கூடிய அதிரடி ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பேட்டிங் ஆர்டர் பலமாக இருக்க, இன்னொரு பக்கம் ராகுல் சாகர், ரபாடா, அர்ஷ்தீப் சிங், இஷான் போரேல், ஹர்பிரீத்தி பிரார் என்று பவுலிங்கும் அந்த அணிக்கு மிக வலிமையாக உள்ளது. 022 ஐபிஎல் ஏலத்தை தொடர்ந்து பஞ்சாப் அணி இந்த தொடரில் புதிய பலம் பெற்றுள்ளது... ஆனால் என்னதான் டீம் வலிமையாக இருந்தாலும் அந்த அணி கப் அடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+