ஈரான் அதிபர் படுகொலையா? உலகை அதிர வைத்த இஸ்ரேல் உளவுப் படை 'மொசாத்'த்தின் டாப் ஆபரேஷன்கள் லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டாலும் இஸ்ரேலின் மொசாத் உளவுப்படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி அழித்திருக்கலாம் என்கிற சந்தேகம் வலுவான பேசுபொருளாகி இருக்கிறது.

அமெரிக்காவின் எஃப்பிஐ, சோவியத் யூனியனின் கேஜிபி ஆகியவற்றை விஞ்சிய உலகின் அதி சக்திவாய்ந்த உளவு அமைப்பாக இன்றும் கோலோச்சுவது மொசாத் மட்டுமே. ஆம் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்புதான் மொசாத்.

Iran President Raisi death- Isarel Mossad s Top Operations List

தற்போது ஈரான் அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதா? இஸ்ரேலால் தாக்கி அழிக்கப்பட்டதா? என்கிற சந்தேகங்களுக்கு காரணமே மொசாத்தின் கடந்த கால- நிகழ் கால 'அழிவு' சரித்திரங்கள்தான். அப்படி என்னதான் செய்துவிட்டது மொசாத் என்கிறீர்களா?

'தூக்கப்பட்ட' ஹிட்லரின் தளபதி: 1960-களில் இஸ்ரேலின் மொசாத் அமைப்பு நடத்திய ஆபரேஷன் பினாலே இன்றைக்கும் உலகை பிரம்மிக்க வைக்கக் கூடியதுதான். பல லட்சக்கணக்கான யூதர்களை படுகொலை செய்து இன்றைக்கு இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாகக் காரணமாக இருந்த ஜெர்மனி ஹிட்லரின் ரகசிய பாதுகாப்புப் படை தளபதிதான் ஐக்மன். பல லட்சம் யூதர்களை கொன்று குவித்ததில் முதன்மைப் பங்காளி. 2-வது உலகப் போரில் ஜெர்மனி தோற்றுப் போய் ஹிட்லர் மரணித்துப் போக ஐக்மன் கதி என்ன என தெரியாமல் போனது.. அவ்வப்போது பிடிபட்டார் என்கிற செய்திகள்தான் வந்தன. இந்த பின்னணியில் அர்ஜென்டினாவில் பதுங்கியிருக்கிறார் ஐக்மன் என்ற தகவலை 'யூத' உளவாளிகள் மூலம் பெற்றது மொசாத். பல மாதங்கள் காத்திருந்து ஐக்மனை அலேக்காகத் தூக்கிய மொசாத், அர்ஜென்டினாவுக்கு சென்ற இஸ்ரேலிய அமைச்சரின் விமானத்தில் அந்த நாட்டுக்குத் தெரியாமலேயே இஸ்ரேலுக்கு கொண்டு வந்து தூக்கில் போட்டு பழிதீர்த்தது. ஐக்மனை பிடிக்க மொசாத் மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் ஆபரேஷன் பினாலே.

ஈரான் அதிபர் ரைசியை படுகொலை செய்ததா இஸ்ரேல்? நேற்றைய நண்பன் இன்றைய கொடூர எதிரியானது எப்படி?


பாலஸ்தீன படுகொலைகள்: 1970களில் யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலைப் படை தீவிர யுத்தம் நடத்தியது. ஜெர்மனியின் மியூனிக்கில் 1972-ல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சென்ற 11 இஸ்ரேலிய வீரர்களை பாலஸ்தீன விடுதலைப் படை சுட்டுப் படுகொலை செய்தது. இதற்கு மொசாத் அமைப்பு பழிதீர்க்க மேற்கொண்ட உளவு நடவடிக்கைகள் பயங்கரமானவை. 1977-ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் இடைவிடாமல் பாலஸ்தீன போராளிக் குழுவின் ஒவ்வொரு தலைவரையும் இலக்கு வைத்து அழித்துக் கொண்டே இருந்தது மொசாத் என்பது பின்னாளில்தான் தெரியவந்தது.

ஈரான் அதிபர் ரைசியை நாங்க படுகொலை செய்யவே இல்லை.. சத்தியமடித்து சொல்லும் இஸ்ரேல்!


சிரியாவை சிதைக்க சதி: சிரியாவில் கோஹன் என்பவர் தேசத்துரோகி; இஸ்ரேலில் ஒரு தேசபக்தர். இஸ்ரேலின் மொசாத் எந்த எல்லைக்கும் ஊடுருவலை மேற்கொள்ளும் என்பது கோஹன் ஒரு நல்ல உதாரணம். சிரியாவின் துணை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படக் கூடிய அளவுக்கு செல்வாக்கான நபராக இருந்தவர் கோஹன். அப்படி செல்வாக்கு மிக்க நபருக்கு சிரியாவின் அத்தனை ராணுவ ரகசியங்களும் அத்துப்படி. இஸ்ரேலுக்கு எதிரான சிரியாவின் தும்மல் கூட மொசாத்துக்கு சென்று சேர அந்த நாடு ரொம்பவே குழம்பிப் போனது. இதனால் சிரியாவின் 'தோழன்' அன்றைய சோவியத் யூனியன் உதவியை நாடியது. சோவியத் யூனியன் சந்தேகத்தின் அடிப்படையில் கோஹனை உளவு பார்க்க இறுதியில் கையும் களவுமாகவே அவர் சிக்கிவிட்டார். பின்னர்தான் பல ஆண்டுகளாக மொசாட்டால் வளர்த்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பக்கா உளவாளி கோஹன் என்பது அம்பலமானது. இதனால் சிரியா அரசு கோஹனை தூக்கிலிட்டுக் கொன்றது. இஸ்ரேல் தேசபக்த மாவீரனாக போற்றுகிறது.

ஈரான் அணு விஞ்ஞானிகள் படுகொலைகள்: ஈரானின் அணு ஆயுத திட்டங்களை நாசமாக்க, ஈரான் கருவிகளை கொள்முதல் செய்யும் ஐரோப்பாவில் போலி நிறுவனங்களை உருவாக்கியது இஸ்ரேலின் மொசாத். பல்வேறு முறைகேடுகள் மூலம் ஈரான் அரசுடன் நெருங்கி அணுசக்தி திட்டங்களுக்கு போலி கருவிகளை கொடுத்து விளையாடிப் பார்த்துவிட்டது மொசாத். ஈரானின் அணு விஞ்ஞானிகள் இன்றளவும் அடுத்தடுத்து மொசாத் உளவுப் படையினரால் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஹமாஸ் யுத்தத்தின் காரணம்: இன்றைக்கு பாலஸ்தீனத்தின் ஹமாஸுடன் மோதுகிறது இஸ்ரேல். இந்த மோதல்களுக்கு அதாவது இஸ்ரேலை ஹமாஸ் வன்மம் தீர்க்க ஒரு காரணம் ஹமாஸின் அறிவியல் தொழில்நுட்ப மூளை- அல் ஸ்வாரியை துனிசியாவில் வைத்து கதையை முடித்ததுதான் எனவும் சொல்லப்படுகிறது.

இத்தகைய அபாயகரமான மொசாத் அமைப்புதான் ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டரை தாக்கி அழித்திருக்கும் என வலுவான சந்தேகம் முன்வைக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+