ஈரான் அதிபர் ரைசியை படுகொலை செய்ததா இஸ்ரேல்? நேற்றைய நண்பன் இன்றைய கொடூர எதிரியானது எப்படி?
டெல்லி: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார் என்பது மட்டுமல்ல செய்தி.. ரைசியின் மரணம் விபத்தால் நிகழ்ந்ததா? அல்லது திட்டமிட்ட படுகொலையா? என்கிற சந்தேகங்களும் விவாதங்களாகி வருகின்றன. ஈரான் அதிபர் ரைசியின் மரணம் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்தின் திட்டமிட்ட படுகொலை என்கிற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேல்- ஈரான் இடையேயான உக்கிரமான மோதல் 3-வது உலகப் போரை நோக்கி சர்வதேச நாடுகளை இழுத்துவிட்டுக் கொண்டே இருக்கிறது. 3-வது உலகப் போர் எப்போது வெடிக்குமோ என்கிற பதற்றமான சூழ்நிலையில்தான் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணம் நிகழ்ந்துள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணம் விபத்துதானா? அல்லது திட்டமிட்ட படுகொலை சதியா? என்கிற விவாதமும் உக்கிரமானதாகவே இருந்து வருகிறது. குறிப்பாக ஈரானின் முதன்மை எதிரியான இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் மீதுதான் அத்தனை சந்தேக கண்களும் திரும்பி நிற்கின்றன. அப்படி என்னதான் இஸ்ரேல்- ஈரான் இடையே பிரச்சனை?
இஸ்ரேலை அன்று ஆதரித்த ஈரான்: 1948-ல்தான் இஸ்ரேல் என்கிற நாடு உருவானது. அப்போது ஈரானில் பஹ்லவி வம்சத்தைச் சேர்ந்த ஷா குடும்பம் அரசாண்டு கொண்டிருந்தது. இஸ்ரேல் உருவாக்கப்பட்டது போது ஈரான் நாடு, பாலஸ்தீனம் பக்கம் நின்றது. ஆனாலும் இஸ்ரேலை எகிப்து ஆதரித்த உடனேயே ஈரானும் இஸ்ரேலுக்கு அங்கீகாரம் கொடுத்தது. இன்னும் சொன்னால் இஸ்ரேலை அங்கீகரித்த உலகின் 2-வது நாடுதான் அன்றைய ஈரான்.
இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தத்தின் போது ஈரான் அதிபர் ரைசிக்கு போன் போட்ட பிரதமர் மோடி- பேசியது என்ன தெரியுமா?
ஈரானின் 1979 புரட்சி: ஈரான், இஸ்ரேல் இடையேயான உறவுகளில் ஷா ஆட்சிக் காலம் வரை எந்த ஒரு சிக்கலும் இல்லை. 1979-ல் ஈரானில் மத அடிப்படையிலான புரட்சி வெடித்தது. ஈரானின் மதகுரு கொமேனி நடத்திய புரட்சி, ஒட்டுமொத்த ஷா வம்சத்து ஆட்சியையே தூக்கியடித்தது. அன்று முதல் ஈரான் முற்று முழுதான மதம் சார்ந்த இஸ்லாமிய குடியரசு நாடாக உருமாறியது. இதன் பின்னர்தான் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை ஈரானின் பிரதான எதிரி நாடுகளாக உருமாறின.
பாலஸ்தீனமும் ஈரானும்: 1979-ல் ஈரானில் உருவெடுத்த கொமேன தலைமையிலான அரசாங்கம் இஸ்ரேல் உறவை முறித்தது. இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன தனி நாட்டை உருவாக்குவதில் ஈரான் படுமுனைப்பு காட்டியது. பாலஸ்தீன விடுதலைப் போரில் ஈரான் தலைவர்களே பங்கேற்றனர். இதனால் இஸ்ரேல்தான் ஈரானின் முக்கியமான முதல் எதிரியாகிப் போனது. ஆனாலும் ஈராக்கைத்தான் இஸ்ரேல் தமது முதல் எதிரியாக்கிக் கொண்டிருந்தது இஸ்ரேல்.
என்ன செய்தது ஈரான்?: 1990களுக்குப் பின்னர் 'பயங்கரவாதம்' என்கிற பெயர் அதிவேகமாக உச்சரிக்கப்பட்டது. ஹிஸ்புல்லா என்ற அமைப்பு பிறப்பெடுக்க காரணமே ஈரான்தான். லெபனானில் மையம் கொண்டிருக்கும் ஹிஸ்புல்லாதான், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்துடன் இப்போதும் இணைந்து நிற்கிறது. ஹமாஸ் மீது கை வைத்தால் ஹிஸ்புல்லா கொதித்தெழும்.. ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தினால் ஈரான் உக்கிரப் போரை நடத்தும்.. ஈராக், ஏமனில் ஹவுத்தி இயக்கம் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினாலும் ஈரான் படை வலிமையைக் காட்டும். இப்படியான ஒரு நெருக்கமான கட்டமைப்புதான் கடந்த 20,30 ஆண்டுகளாக ஈரான், லெபனான், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளினூடே உருவாக்கப்பட்டது. அத்தனை ஆயுதக் குழுக்கள் அல்லது சோ கால்ட் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வாரிக் கொடுத்த வள்ளல் தேசம்தான் ஈரான்.
ஈரான் - இந்தியா இடையே ஒரு வாரம் முன் உருவான முக்கிய ஒப்பந்தம்! பொருளாதார தடை என எச்சரித்த அமெரிக்கா!
நிழல் யுத்தங்களில் இஸ்ரேல் - ஈரான்: இஸ்ரேலும் ஈரானும் நேரடி போர்களில் ஈடுபடாமல் 'நிழல்' குழுக்கள், பயங்கரவாத இயக்கங்கள் மூலம் பகைதீர்த்துக் கொள்ள பல படுகொலைகள் அரங்கேறிக் கொண்டே இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈரான் அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்ட போது அத்தனை கைகளும் இஸ்ரேல்தான் காரணம் என குற்றம்சாட்டி நீட்டின. இந்த யுத்தம் செங்கடலில் இருதரப்பும் மாறி மாறி கப்பல்களை தாக்குவதாகவும் நீண்டது.
இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம்: இதன் அடுத்த கட்டமதான் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம். பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் 2023-ம் ஆண்டு யுத்தம் ஈரான் -இஸ்ரேல் இடையேயான வெளிப்படையான யுத்தத்துக்கும் 3-வது உலகப் போருக்குமான திறவுப் பாதையாகவும் இருந்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த இஸ்ரேல்- ஈரான் இடையேயான யுத்தம் பகிரங்கமாகிவிட்டது.
ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: சிரியா தலைநகர் டமாஸ்கஸில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்கியது. இங்கிருந்து ஈரான் - இஸ்ரேல் இடையேயான நேரடி யுத்தம் வெடித்தது. டமாஸ்கஸ் ஈரான் தூதரகம் மீதான தாக்குதலில் மூத்த ராணுவ தளபதி ஜாஹோதி உள்ளிட்ட 13 பேர் படுகொலை செய்யப்பட்ட ஈரான் பெருங்கோபம் கொண்டு தமது ஒட்டுமொத்த நெட்வொர்க் நாடுகள் மூலம் இஸ்ரேலை கதிகலங்க வைத்தது. ஈரானின் நட்பு சக்திகள்- நெட்வொர்க் நாடுகள் இஸ்ரேல் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கின்றன. இதுதான் 3-வது உலகப் போரை நோக்கி சர்வதேசத்தை இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறது.
இஸ்ரேலின் மொசாத் காரணமா?: இத்தகைய யுத்த சூழலில்தான் இப்போது ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துவிட்டார்; அவரது எரிந்த உடல் மட்டுமே கிடைத்தது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆனால் பொதுவாகவே ரைசியின் மரணம் ஒரு விபத்து என எவருமே நம்பவில்லை.. அத்தனை பார்வைகளும் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்தின் நாசகார சதித் திட்டம்தான் என்கிற குற்றச்சாட்டு வலிமையாக முன்வைக்கப்படுகிறது! நெருப்பில்லாமல் புகைவதில்லை!
-
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications