ஈரான் அதிபர் ரைசியை நாங்க படுகொலை செய்யவே இல்லை.. சத்தியமடித்து சொல்லும் இஸ்ரேல்!
டெஹ்ரான்: ஈரான் அதிபர் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை; தாங்கள் காரணமும் அல்ல என இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் எல்லையில் அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. பல மணிநேர நீண்ட தேடுதலின் பின்னர் துருக்கியின் டிரோன்கள், ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை உறுதி செய்தது. அத்துடன் ரைசி உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஈரான் அதிபர் ரைசியின் மரணம் உலக நாடுகளை உலுக்கி இருக்கிறது. இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் அதிதீவிரமாகி, இஸ்ரேல்- ஈரான் யுத்தமாக உருமாறிக் கொண்டிருக்கிறது. இதுவே 3-வது உலகப் போர் உருவாகவும் காரணமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு இஸ்ரேல்தான் காரணம்; இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புதான் ரைசியை படுகொலை செய்துவிட்டதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
ஈரான் அதிபர் ரைசியை படுகொலை செய்ததா இஸ்ரேல்? நேற்றைய நண்பன் இன்றைய கொடூர எதிரியானது எப்படி?
அதேநேரத்தில் இஸ்ரேல், இந்த சந்தேகங்களை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பேசிய இஸ்ரேல் அதிகாரிகள், ரைசி ஹெலிகாப்டர் விபத்துக்கு நாங்கள் காரணம் அல்ல; இது எங்களுடைய நடவடிக்கையும் அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
ஆனாலும் உலக நாடுகள் இஸ்ரேல் மீதான சந்தேகப் பார்வையை விலக்க முடியாத நிலைமைதான் உள்ளது. கடந்த மாதம்தான் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ஈரானின் தூதரகம் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தி ராணுவ தளபதி உள்ளிட்ட 13 வீரர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில் ரைசியின் மரணம் நிகழ்ந்திருப்பதால் இஸ்ரேல் பக்கமே அனைத்து நாடுகளும் சந்தேகத்தை திருப்பிக் கொண்டிருக்கின்றன.
ஈரான் அதிபர் ரைசி மரணம்.. இடைக்கால அதிபராகும் முகமது மொக்பர்! யார் இவர்? என்ன செய்யப் போகிறார்?
1979-ம் ஆண்டு ஈரானில் மத அடிப்படையிலான இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு ஷாக்கள் ஆட்சி அகற்றப்பட்டது. இஸ்லாமிய குடியரசு நாடாக ஈரான் உருமாறியது முதலே இஸ்ரேலுடனான உறவு சீர்குலைந்தது. 1990களுக்குப் பின்னர் பல்வேறு ஆயுதக் குழுக்களை ஈரான் உருவாக்கியது, பாலஸ்தீன விவகாரத்தில் உறுதியான ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருப்பது உள்ளிட்டவை இஸ்ரேல்- ஈரான் இடையேயான பகைக்கு அடிப்படையான காரணங்களாகும்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications