ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை.. உண்மை இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் போர் புரிந்து வருகின்றன. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனை சரிசெய்ய ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய நம் நாடு முடிவு செய்துள்ளது. இதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியதாக வெளியான தகவலை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி வாங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அப்படியான அனுமதி தேவையில்லை.

இந்த விஷயத்தில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய விஷயத்தை தெளிவுப்படுத்துவோம். அதாவது நம் நாட்டின் எனர்ஜி, பொருளாதார கொள்கைகள் எப்படி செயல்படுகிறது என்பதை அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 25-30% ரஷ்யாவிடம் இருந்து வருகிறது.

இதுநம் நாட்டின் எரிசக்தி துறையில் நாட்டின் நலன் மற்றும் சுதந்திரமான உரிமை உள்ளிட்டவற்றால் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா தான் நம் நாட்டுக்கான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக இருந்தது. இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் ஒரு நாளைக்கு சுமார் 1.0 முதல் 1.7 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தன.

இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட 25-30 சதவீதத்திற்கு சமம். மேலும் அந்த ஒரு மாதத்தில் சுமார் 28-48 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டது. எளிமையாக புரியும்படி கூற வேண்டும் என்றால் நம் நாடு தினமும்
சுமார் 10 லட்சம் பேரல் ரஷ்ய எண்ணெயை வாங்கி வருகிறது.

இந்த புள்ளிவிவரங்களே, இந்தியாவின் எரிசக்தி தேர்வுகள் வெளிநாடால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை புறம்தள்ளிவிடுகிறது. அதேபோல் தற்போது ஈரான் போர் விவகாரத்தில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்பதும் உறுதியாகி விடுகிறது.

இதனால் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதிகள் தொடர்ந்து வருகின்றன. ஏனென்றால் நம் நாட்டின் 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையை பாதுகாப்பது தான் இந்தியாவின் கொள்கையாக உள்ளதுது. இது மீண்டும் மீண்டும் மத்திய அரசால் தெளிவுப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கச்சா எண்ணெய் என்பது அரசியல் சார்ந்த சலுகை அல்ல. அது மக்களுக்கான தேவை என்று தொடர்ந்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவைகளில் 85 சதவீதத்துக்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில், அரசு விலை, விநியோகத்தின் நிலையாக வைப்பது,புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் உள்நாட்டு பணவீக்கம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு நிலையான சமநிலையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. மேலும் தள்ளுபடி விலையில் வாங்கப்படும் ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெயும், அதற்கான போக்குவரத்து, உற்பத்தி, மின்சாரம் உள்ளிட்டவற்றின் பலன் நேரடியாக இந்தியாவின் நடுத்தர குடும்பங்களை சென்றடைகிறது.

கடந்த 2022-ல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு இந்தியா தனது எரிசக்தி மூலங்களை பன்முகப்படுத்தியதற்கான முக்கியக் காரணம். போட்டி விலையிலும் அதிக அளவிலும் கிடைத்ததால், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க நம் நாடு சம்மதித்தது. அதேபோல் இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் கள நிலவரத்தை உணர்ந்து நடைமுறைக்கேற்றவாறு செயல்பட்டன, உலகளாவிய விலை அதிர்ச்சிகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் இந்த யுக்தியை அரசு ஆதரித்தது. இந்த அணுகுமுறை இன்றும் தொடர்கிறது.

ஆம், இந்தியா அமெரிக்காவுடன் உரையாடல்களை மேற்கொள்கிறது, அதேபோல ரஷ்யா, வளைகுடா நாடுகள் மற்றும் பிற சப்ளையர்களுடனும் பேசுகிறது. பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான தூதரக ரீதியிலும், வர்த்தக பேச்சுவார்த்தைகள், வரிகள் மற்றும் அரசியல் செய்திகள் இயல்பாகவே அடங்கும். ஆனால் அத்தகைய விவாதங்களை "அனுமதி" என்று புரிந்துகொள்வது உண்மையை திரித்து கூறுவதாகும்.

இந்தியா தனது நிலைப்பாட்டை ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாகக் கூறி வந்துள்ளது. மத்திய அரசு தனது எரிபொருள் கொள்முதல் சந்தை நிலைமைகளாலும், தேசிய நலன்களாலும் தீர்மானிக்கப்படுகின்றன என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உண்மையில், ரஷ்ய கச்ச எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்கா வரிகளை அறிவித்த பின்னரும் கூட இந்தியா இறக்குமதியை நிறுத்தவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+