இந்தியாவின் தலையில் ஆபத்து..இமயமலையில் புதைந்த அணுகுண்டு! இந்தியாவுக்கு தெரிந்தே அமெரிக்கா செய்த சதி
டெல்லி: இமயமலைப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் திடீர் வெள்ளம், பனிப்பாறை உருகுவது மற்றும் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்குப் பின்னால், அமெரிக்க உளவுத்துறை CIA-வின் ரகசிய திட்டம் ஒன்றே காரணமா என்ற அதிர்ச்சி தரும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ள ஒரு விரிவான கட்டுரை, இந்த சந்தேகத்தை மீண்டும் உலக கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அந்த கட்டுரையில், இமயமலைத் தொடரில் உள்ள நந்தாதேவி சிகரத்தின் உச்சிப் பகுதியில், இந்தியாவின் உதவியுடன் அமெரிக்கா அணு மின்சாரத்தில் இயங்கும் உளவு கருவி ஒன்றை நிறுவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் அணு ஆயுத நடவடிக்கைகளை உளவு பார்க்கும் நோக்கில் இந்த கருவி பொருத்தப்பட்டதாகவும், அதன் மின் உற்பத்திக்காக புளூட்டோனியம் என்ற மிக ஆபத்தான கதிர்வீச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமயமலை அணுகுண்டு
1965-ம் ஆண்டு, பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், சீனா அணுகுண்டு சோதனை நடத்தியது. இதை தொடர்ந்து சீனாவின் அணுசக்தி நடவடிக்கைகளை கண்காணிக்க அமெரிக்காவின் CIA, இந்தியாவின் ஒத்துழைப்புடன் இந்த ரகசிய திட்டத்தை வகுத்தது. அதன்படி, நந்தாதேவி மலையின் உச்சியில் அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனா அமைக்க திட்டமிடப்பட்டது.
சிஐஏ ரகசிய திட்டம்
அந்த கருவியில், நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டில் பயன்படுத்தப்பட்ட அளவின் மூன்றில் ஒரு பங்கு புளூட்டோனியம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த உளவு முயற்சி எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தது. கடுமையான பனிப்புயல் காரணமாக, மலையேற்ற குழுவினர் அந்த கருவியை அங்கேயே விட்டுவிட்டு உயிர் தப்ப வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். பின்னர், அந்த அணுசக்தி கருவி பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு, இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமல் மர்மமாகவே உள்ளது.
அமெரிக்க அரசு
அமெரிக்க அரசும் CIA-வும் இதுகுறித்து ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டதில்லை. இந்த காணாமல் போன அணுசக்தி சாதனத்திலிருந்து வெளியேறும் வெப்பம் மற்றும் கதிர்வீச்சே இமயமலைப் பகுதிகளில் பனிப்பாறைகள் அதிகளவில் உருகுவதற்கும், அதனால் ஏற்படும் திடீர் வெள்ளங்களுக்கும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுப்பெற்று வருகிறது.
புளூட்டோனியம்
மேலும், புளூட்டோனியம் கலந்த கதிர்வீச்சுப் பொருள் கங்கை ஆற்றில் கலந்து, கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறதா என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த ரகசிய திட்டம் எப்படி உருவானது என்பதும் சுவாரசியமானதாக உள்ளது. அமெரிக்க விமானப்படை தளபதி ஜெனரல் கர்டிஸ் லெமே, எவரெஸ்ட் மலையேற்ற வீரரும் புகைப்படக்காரருமான பாரி பிஷப்புடன் ஒரு விருந்தில் பேசிக் கொண்டிருந்தபோது, இமயமலை சிகரங்களில் இருந்து திபெத் மற்றும் சீனப் பகுதிகளை தெளிவாக கண்காணிக்க முடியும் என்ற யோசனை உருவானது.
ஜிம் மெக்கார்த்தி
இதைத் தொடர்ந்து, CIA, பிஷப்பை ஒரு ரகசிய மலையேற்ற பயணத்தை ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டது. இந்த பயணம் வெளிப்படையாக ஒரு அறிவியல் ஆராய்ச்சி பயணமாக காட்டப்பட்டது. "சிக்கிம் அறிவியல் ஆராய்ச்சி பயணம்" என்ற பெயரில் போலியான திட்டம் உருவாக்கப்பட்டு, மாதம் 1,000 டாலர் சம்பளத்தில், இளம் அமெரிக்க மலையேற்ற வீரரும் வழக்கறிஞருமான ஜிம் மெக்கார்த்தி இதில் இணைக்கப்பட்டார்.
சீனாவை உளவு பார்க்க..
சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவும் இந்த திட்டத்தில் மறைமுகமாக இணைந்ததாக கூறப்படுகிறது. இந்திய குழுவின் தலைவராக இருந்த கேப்டன் எம்.எஸ். கோலிக்கு இந்த திட்டம் தொடக்கத்திலிருந்தே பிடிக்கவில்லை. "இது முழுக்க முழுக்க முட்டாள்தனம்" என்று அவர் வெளிப்படையாகவே கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில், உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்காவில் இந்த கருவியை நிறுவ திட்டமிடப்பட்டது.
நந்தாதேவி மலை
ஆனால், கோலியும் மெக்கார்த்தியும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இறுதியாக நந்தாதேவி சிகரம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ரகசிய சம்பவம் பல ஆண்டுகள் வெளிச்சத்திற்கே வராமல் இருந்தது. பின்னர், ஹோவர்ட் கோன் என்ற இளம் பத்திரிகையாளர் இந்த கதையை கண்டுபிடித்து, Outside பத்திரிகையில் வெளியிட்டார். இதன் மூலம் உலக அளவில் பெரும் சர்ச்சை வெடித்தது.
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே
இந்நிலையில், இந்த அணுசக்தி கருவி தவறான கைகளுக்கு சென்றால், அதைப் பயன்படுத்தி அணுகுண்டு கூட உருவாக்க முடியும் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே எச்சரித்துள்ளார். உடனடியாக அந்த கருவியை கண்டுபிடித்து வெளியே எடுத்து, மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல், உத்தராகண்ட் அமைச்சர் சத்பால் மகாராஜ், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அணுசக்தி கருவி
உளவுத்துறை தொடர்பான மிக முக்கியமான விவகாரம் என்பதால், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் அரசுகளும் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காக்கின்றன. ஆனால், இமயமலைக்குள் உண்மையில் ஒரு அணுசக்தி கருவி புதைந்துள்ளதா, அது தான் இயற்கை பேரழிவுகளுக்குக் காரணமா என்ற கேள்வி இப்போது மீண்டும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
-
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை தொடங்கிவிட்டோம்.. நெருங்கினால் பேரழிவு! டிரம்ப் வார்னிங் -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
5 மணி நேரம் ரூம் ரூமாக ஓடிய அதிகாரிகள்.. அமெரிக்க தலைவர்களின் ரூமிற்கே வர மறுத்த ஈரான்! பரபர தகவல் -
அமைதிப் புறா பறக்கவில்லை! அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. அடுத்து என்ன! 4 ஆப்ஷன்கள் -
டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த ரஷ்யா! உலக போர் ஆபத்து? -
ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் -
அதிபர் பதவியை இழக்கும் டிரம்ப்? களத்தில் இறங்கிய அந்த 70 பேர் + மாஜி அமெரிக்க உளவு துறை தலைவர்! -
மொத்தமாக சொதப்பிய டிரம்ப்.. இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்விக்கு இந்த 5 விஷயம்தான் காரணம்! -
ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல் -
கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென சீனா பக்கம் திரும்பி நேரடி வார்னிங்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்












Click it and Unblock the Notifications