நிதிஷ் OR சந்திரபாபு நாயுடு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியுமா? வாய்ப்பு இருக்காமே.. எப்படி தெரியுமா?
டெல்லி: பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளது. குறிப்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை நம்ப வேண்டி இருக்கிறது. ஆனால் இவர்கள் அடிக்கடி கூட்டணி மாறுவார்கள் என்பதாலும், தற்போது அதிக டிமாண்ட் வைக்கலாம் என்பதாலும் பாஜக பயப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் நிதிஷ் குமார் அல்லது சந்திரபாபு நாயுடு இன்றி பாஜகவால் ஆட்சி அமைத்து தொடர்ந்து நடத்த முடியும் என்ற தகவல் வெளியாகி உள்ளது
நம் நாட்டில் 7 கட்டங்களாக 543 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் என்பது நடந்தது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 இடங்கள் தேவை. இந்த 272 தொகுதிகளில் வெல்லும் கட்சியால் மத்தியில் தனித்து ஆட்சியமைக்க முடியும்.

ஒருவேளை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாவிட்டால் பல கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கலாம். அந்த வகையில் நேற்று வெளியான தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தற்போது மத்தியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
நேற்றைய தினத்தை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்த்தால் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ளன. இதனால் பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் உள்ள பிரதமர்மோடியின் இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
பீகார் முதல்வரும், ஜேடியூ தலைவருமான நிதிஷ் குமார், ஆந்திரா முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பீகார் முன்னாள் முதல்வர் மஞ்சி, கர்நாடகா முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி உள்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின்போது அனைவரும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இன்றைய தினம் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிரதமர் மோடி சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே தான் பாஜகவிடம் சிறு தயக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் அடிக்கடி கூட்டணி மாறிய வரலாறு உள்ளது. இதனால் அவர்களை நம்பி ஆட்சியை அமைத்த பிறகு திடீரென்று ஆதரவை வாபஸ் பெற்றால் என்ன செய்வது என்பதையும் பாஜக நினைத்து பார்க்கிறது. அதோடு பாஜகவுக்கான வாபஸை திரும்ப பெற்று எதிர்க்கட்சி தலைவர்களின் ‛இந்தியா' கூட்டணியில் இணைந்தால் என்ன செய்வது? என்றும் பாஜக நினைக்கிறது.
இதனால் சில கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் தங்களுடனே கூட்டணியில் தொடர வேண்டும் எனவும் பாஜக தரப்பில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் சந்திரபாபு நாயுடு சார்பில் தனது கட்சிக்கு 10 மத்திய அமைச்சர்கள், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவற்றை கோரிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நிதிஷ் குமாரும் தனதுக்கு கட்சிக்கு 3 மத்திய அமைச்சர் பதவி, 2 மத்திய இணையமைச்சர் பதவி, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்தை கோரியதாக சொல்லப்படுகிறது. அதோடு இருவரும் மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாக்களை கேட்பதோடு, லோக்சபா சபாநாயகர் பதவியையும் பெற குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது பாஜகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முடிந்தவரை நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவை சமாளித்து அவர்களின் பெரும்பாலான கோரிக்கையை நிறைவேற்றுவதாக மத்தியில் ஆட்சி அமைக்கவும், அதன்பிறகு அவர்கள் தொல்லை அளித்தால் இருவரில் ஒருவரை பாஜக கழற்றி விடலாம் எனவும் கூறப்படுகிறது. அதாவது தற்போது பாஜக கூட்டணிக்கு மொத்தம் 294 எம்பிக்கள் உள்ளன. இதில் பாஜகவை சேர்ந்தவர்கள் 240 பேர். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்பிக்களும், நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சிக்கு 12 எம்பிக்களும் உள்ளனர். அதேபோல் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு 7 எம்பிக்கள் உள்ளனர். லோக்ஜன்சக்தி கட்சிக்கு 5, கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 2 எம்பிக்கள் உள்பட பிற சிறு கட்சிகளுக்கு 6 எம்பிக்கள் உள்ளன.
அதன்படி பார்த்தால் நிதிஷ் குமார் தொல்லை கொடுத்து கூட்டணியில் இருந்து தனது 12 எம்பிக்களுடன் வெளியேறினாலும் கூட 282 எம்பிக்கள் இருப்பார்கள். அதேபோல் சந்திரபாபு நாயுடுவும் ஏதாவது பிரச்சனை செய்து கூட்டணியில் இருந்து தனது 16 எம்பிக்களுடன் வெளியேறினாலும் 278 எம்பிக்களுடன் மத்தியில் பாஜக ஆட்சியை தொடர முடியும். மேலும் தற்போதைய தேர்தலில் சுயேச்சைகளாக போட்டியிட்டு 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார். இவர்கள் பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை பாஜகவில் இணைத்து பாஜக எம்பியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் பாஜகவுக்கு கூடுதலாக 7 எம்பிக்கள் கிடைப்பார்கள். இது இக்கட்டான சூழலில் பாஜகவுக்கு கைகொடுக்கும் என பாஜக திட்டமிட்டுள்ளது.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications