இந்தியா - ரஷ்யா உறவை யாராலும் தடுக்க முடியாது.. டிரம்பின் மூக்கை உடைத்த வெளியுறவுத்துறை! அதிரடி
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, நெருங்கிய நட்பு நாடாக செயல்படுவது உள்ளிட்டவற்றால் கோபமான டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை விதித்துள்ளார். மேலும் நம் நாட்டின் பொருளாதாரம் செத்துப்போய்விட்டது என்றும், ரஷ்யா பொருளாதாரத்துடன் சேர்த்து ஒன்றாக மண்ணில் புதைக்கட்டும் என்று திமிராக பேசினார். இந்நிலையில் தான் ரஷ்யா உறவை கைவிட முடியாது எனக்கூறி மத்திய வெளியுறவுத்துறை டிரம்பின் மூக்கை அறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 25 சதவீதம் வரி விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு இன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7 ம் தேதி முதல் நம் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.

இந்த வரி விதிப்புக்கு முக்கிய காரணம் ரஷ்யாவும், நம் நாட்டுக்கும் இடையேயான நட்பு மற்றும் வர்த்தகம் தான். உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவை தனித்து விட தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
மேலும் அமெரிக்காவை ஒப்பிடும்போது ரஷ்யாவுடன் அதிக வர்த்தகத்தை நம் நாடு செய்கிறது. ரஷ்யாவிடம் இருந்து தான் அதிகமான தளவாடங்களை நம்நாடு வாங்குகிறது. அதேபோல் அமெரிக்காவுக்கு அதிக பொருட்களை ஏற்றுமதி செய்யும் நம் நாடு, அமெரிக்காவிடம் இருந்து குறைந்த அளவில் தான் இறக்குமதி செய்கிறது. இதனை டிரம்பால் தாங்கி கொள்ள முடியவில்லை.
இதனால் தான் நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை அவர் விதித்துள்ளார். மேலும் கோபமான டிரம்ப் நம் நாட்டின் பொருளாதாரத்தை செத்துப்போன பொருளாதாரம் என்று ஆணவமாக பேசியிருந்தார். இதுபற்றி அவர், ‛‛இந்தியா ரஷ்யாவுடன் சேர்ந்து என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. இருநாடுகளும் தங்களின் செத்துப்போன பொருளாதாரத்தை ஒன்றாக மண்ணில் புதைக்கட்டும். அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த அளவில் தான் வர்த்தகம் செய்துள்ளோம். மாறாக இந்தியாவின் வரிகள் உலகிலேயே அதிகமாக உள்ளன. அதேபோல், ரஷ்யாவும் அமெரிக்காவும் வர்த்தகத்தையும் செய்யவில்லை'' என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்வால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ரஷ்யாவுடனான உறவால் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத வரி, டிரம்பின் இந்த ஆணவப்பேச்சு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
‛‛பல்வேறு நாடுகளின் உறவு என்பது ஒவ்வொரு நாடுகளின் சொந்த நலன்களின் அடிப்படையில் தான் உள்ளது. இதனை மூன்றாவது நாடு கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. இந்தியா - ரஷ்யா இடையேயான நட்பு நிலையானது. காலத்தால் பரிசோதிக்கப்பட்ட கூட்டணியாக இது உள்ளது'' என்றார். இதன்மூலம் அமெரிக்கா என்னதான் முயன்றாலும் இந்தியா - ரஷ்யா இடையே விரிசலை ஏற்படுத்த முடியாது என்பதை மத்திய வெளியறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இதையடுத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டதாக வெளிவரும் தகவல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால், ‛‛எரிசக்தி தேவைக்கான பரந்த கொள்கை நம்மிடம் உள்ளது. சந்தையில் என்ன கிடைக்கிறது. உலகளாவிய சூழலை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படுகிறது. சமீபத்திய மாதங்களில் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் சப்ளையரில் ரஷ்யா தான் முன்னிலையில் உள்ளது. மொத்த இறக்குமதியில் கிட்டத்தட்ட 35-40 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து தான் வருகிறது. உக்ரைன் போருக்கு முன்பு இது வெறும் 0.2 சதவீதமாக இருந்தது'' என்றார். இதன்மூலம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கப்படும் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
அதேபோல் ‛‛இந்தியா ஒருநாள் பாகிஸ்தானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கலாம் என்று டிரம்ப் கூறியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால், ‛‛இந்த விஷயத்தில் நான் சொல்ல எந்த கருத்தும் இல்லை'' என்று பதிலளித்தார். மேலும் இந்தியா - அமெரிக்கா இடையேயான தற்போதைய விவகாரம், பாதுகாப்பு துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால், ‛‛இந்தியாவும், அமெரிக்கா இடையே பகிரப்பட்ட நலன், ஜனநாயக மதிப்பு, இருநாட்டு மக்கள் இடையேயான உறவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கூட்டணி உள்ளது.
இது பல சவால்களை தாண்டி வந்துள்ளது. இருநாடுகளும் உறுதியளிக்கப்பட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த உறவு தொடர்ந்து முன்னேறும் என்று நம்புகிறோம். பாதுகாப்பு துறையை எடுத்து கொண்டால் நமது பாதுகாப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தான் தீர்மானம் செய்யப்படுகிறது'' என்றார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications