சம்பளத்தைவிட பென்ஷன் அதிகமா? ஐசிஐசிஐ வங்கி, செபி தலைவரை விடாத காங்கிரஸ்.. சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச்க்கு விதிமுறைகளை மீறி, ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்தும் மாதாமாதம் சம்பளம் கொடுத்ததாகவும், மாதபிக்கு ரூ.16.8 கோடி ஊதியத்தை ஐசிஐசிஐ தந்ததாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. இதனை ஐசிஐசிஐ மறுத்த நிலையில், தற்போது காங்கிரஸ் புதிய கேள்விகளை முன்வைத்துள்ளது.

செபி தலைவராக பணியாற்றி வரும் மாதபி புச் மீது ஹிண்டன்பர்க் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தது. அதில், அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை செபி தலைவர் மறுத்தார். ஹிண்டன்பர்க் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு மாதபி புச் மீது எழுந்துள்ளது.

sebi congress icici bank

அதாவது, மாதபி புச் விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி கூறியது. 2017ஆம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் 16.8 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சி முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு மாதபி புச் தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதனிடையே, ஐசிசிஐ வங்கி விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், மாதபி புச் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. அவர் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வுகால பலன்களை தவிர அவருக்கு ஊதியமோ, இ.எஸ்.ஐ.பி. பலனையோ ஐசிஐசிஐ வங்கி அல்லது ஐசிஐசி குழும நிறுவனங்கள் எதுவும் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக மீண்டும் பரபரப்பு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கூறியிருப்பதாவது:- நேற்று வெளியிட்ட தகவலின் அடிப்படையில், பிரதமர் மோடி, மாதபி புரி பச், ஐசிஐசி வங்கியிடம் சில கேள்விகளை எழுப்பினோம். மாதபி புச் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ஓய்வு பெறும் போது, 2013-14-ல் கிரஜூட்டி தொகையாக ரூ.71.90 லட்சம் பெற்றுள்ளார். 2014-15ல் ஒய்வு பெற்றதற்கான பென்ஷனாக ரூ.5.36 கோடி பெற்றுள்ளார்.

2014-15ல் மாதபி புச்சிற்கும் ஐசிஐசிஐ வங்கிக்கும் இடையே செட்டில்மெண்ட் ஏற்பட்டது என்றால். 2015-16-க்கு பிறகு ஐசிஐசியிடம் இருந்து எதுவும் பெற்றிருக்க மாட்டார். ஆனால், 2016-17ல் பென்ஷன் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 2007-2008 முதல் 2013-14 வரையில் மாதபி பச்சின் சராசரி சமபளத்தை கணக்கிட்டால் கிட்டத்தட்ட ரூ.1.30 கோடி வருகிறது. ஆனால், சராசரி பென்ஷன் ரூ.2.77 கோடியாக உள்ளது.

சம்பளத்தை விட அதிக பென்ஷன் கொடுக்கும் வேலை எது உள்ளது? பென்ஷன் என்று சொல்லப்படுவது 2016-17ல் மீண்டும் தொடங்கப்பட்டது ஏன்? என்பதற்கு மாதபி புரி பச் பதிலளிப்பார் என நம்புகிறேன். செபியில் முழு நேர உறுப்பினரான பிறகே மாதபி புரி பச்சிற்கு 2.77 கோடி பென்ஷன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்பது இங்கே கவனிக்க வேண்டியது" என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+