இந்தியாவை ஏமாற்றும் புதின்? S 400 தராமல் இழுத்தடிக்கும் ரஷ்யா.. சீனா தான் காரணமாமே?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நட்பு நாடான ரஷ்யாவிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி இன்னும் 2 எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் நமக்கு வர வேண்டி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை ரஷ்யா தருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் நம் நாட்டுக்கான எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் பின்னணியில் சீனா சதிவேலையில் இறங்கலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தது. இதில் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக நம் நாடு பாகிஸ்தானை தாக்கியது. கடந்த 7 ம் தேதி 9 பயங்கரவாத முகாம்கள், கடந்த 10ம் தேதி காலையில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டது. நம் நாடு தொடுத்த அதிரடி தாக்குதலில் கதறிய பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்காக நம்மிடம் சரணடைந்தது. பாகிஸ்தான் கெஞ்சியதால் நம் நாடு தாக்குதலை நிறுத்தியது.

S 400 Russia China India 400

முன்னதாக ‛ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் நம்மை தாக்க முயன்றது. பாகிஸ்தானும், நம் நாட்டை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியது. இவை அனைத்தும் வானில் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது. இதனால் நம் நாட்டுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. பாகிஸ்தானின் தாக்குதலில் இருந்து நம் நாடு தப்பிக்க முக்கிய காரணம் எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு சிஸ்டம் தான்.

இந்த எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு ரஷ்யாவின் தயாரிப்பாகும். நம் நாட்டில் இது ‛சுதர்ஷன சக்ரா' என்று நம் நாட்டில் அழைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018 ம் ஆண்டில் நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மொத்தம் 5 எஸ் 500 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் கடந்த 2021ம் ஆண்டு கிடைத்தது. தற்போது வரை எஸ் 300 ஏவுகணை சிஸ்டம் 3 எண்ணம் நமக்கு கிடைத்துள்ளது. இன்னும் 2 கிடைக்கவில்லை.

இதனை வழங்க வேண்டும் என்று நம் நாடு ரஷ்யாவுக்கு கோரிக்கை வைத்தது. வரும் 2026ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று ரஷ்யா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 2 எஸ் 400 சிஸ்டமை நம் நாட்டுக்கு தருவதில் ரஷ்யா தொடர்ந்து தாமதம் செய்வதன் பின்னணியில் சீனா உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக ‛தி பிரிண்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‛‛ரஷ்யாவில் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை Almaz-Antey என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சீனாவில் ஒரு ட்ரோன் ஆலை இருக்கிறது. உக்ரைன் போருக்கு நடுவேயும் கூட இங்கு பிரச்சனையின்றி ட்ரோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

சீனாவில் இருக்கும், ‛சிப்' மற்றும் பிற முக்கிய தொழில்நுட்பங்கள் பற்றி கற்றுக்கொள்ள இந்த நிறுவனம் வழிவகுக்கிறது. இதனால் இந்த விஷயத்தில் சீனாவை நம்பி அந்த நிறுவனம் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இது நம் நாட்டுக்கு கவலையான விஷயமாகும். ஏனென்றால் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை நம் நாட்டுக்கு அனுப்பாமல் இருக்க சீனா பிரஷர் போடலாம். நம் நாடு வான்வெளி பாதுகாப்பில் பலம் பெற்றால் அது சீனாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதனால் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை நம் நாட்டுக்கு கொடுக்காமல் இருக்க சீனா சதிவேலையில் இறங்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+