வரி பிரச்சனை ஓவர்? டிரம்புடன் மீண்டும் கைகோர்க்கும் மோடி? 24 மணிநேரத்தில் நடந்த 2 மேட்டர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்தார். அதோடு நம் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் இருநாடுகளின் உறவு சீர்குலைந்தது. இந்நிலையில் தான் தற்போது டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது சாப்ட்கார்னர் காட்ட தொடங்கி உள்ளார். அதோடு பிரதமர் மோடிக்கு எப்போது நண்பனாக இருப்பேன் என்று கூறியதும், அதற்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்ததும் கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையே தான் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா - அமெரிக்கா உறவை வலுப்படுத்தும் வகையில் 2 முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பிரதமர் மோடி - டொனால்ட் டிரம்ப் மீண்டும் இணைகிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்தார். இதனால் இருநாடுகளுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டது. வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி டிரம்ப் இந்த வரியை போட்டார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி சரிய தொடங்கி உள்ளது.

is-us-india-tariffs-problem-over-will-modi-join-hands-with-america-again-these-2-things-happened

இதனால் நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் நெருக்கம் காண்பித்தார். இதனை அமெரிக்காவால் ஏற்க முடியவில்லை. இதனால் டிரம்ப் அதிருப்தியானார்.

மோடி என் நண்பர்

நேற்று தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் புதின் - மோடி - ஜி ஜின்பிங் இருக்கும் போட்டோவை வெளியிட்ட டிரம்ப் ‛‛நாம் இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அவர்கள் ஒன்றாக நீண்டகால மற்றும் வளமான எதிர்காலத்தை கொண்டிருக்கட்டும்'' என புலம்பியிருந்தார். அதன்பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் ‛‛இந்தியாவை, சீனாவிடம் இழந்ததற்கு யார் காரணம்?'' என்ற கேள்விக்கு, ‛‛நாங்கள் காரணம் இல்லை என்று நினைக்கிறேன்'' என்று கூறினார்.

அதோடு ‛‛தற்போதைய இந்த பாயிண்ட்டில் இந்தியா உடனான உறவை புதுப்பிப்பீர்களா?'' என்ற கேள்விக்கு டொனால்ட் டிரம்ப், ‛‛நான் எப்போதும் அதனை செய்வேன். நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை.

டிரம்ப் திடீர் மனமாற்றம்

ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு உள்ளது. இதுபற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது தான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் இங்கு வந்து சென்றார்'' என்றார்.

வரி விவகாரத்தில் மோடியை கடுமையாக டிரம்ப் விமர்சனம் செய்த நிலையில் தற்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது. மேலும் டிரம்பின் இந்த பேச்சு தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது.

முதல் மேட்டர்

அதனை பார்த்த பிரதமர் மோடி, ‛‛நம்முடைய உறவுகள் கறி்தத அதிபர் டிரம்பின் உணர்வுகள் மற்றம் நேர்மறையான மதிப்பீட்டை பாராட்டுகிறேன். இதனை முழுமையாக பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் நேர்மைறயான ம்றும் எதிர்கால நோக்குடன் விரிவான, உலகளாவிய கூட்டாண்மையை கொண்டுள்ளது'' என்றார்.

மோடியை அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்த நிலையில் பிரதமர் மோடியும் அவருக்கு நன்றி சொல்லும் விதமாக இந்தியாவும், அமெரிக்காவும் உலகளாவிய அளவில் கூட்டாண்மையை கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். இது தற்போதைய வரி விவகாரத்தில் இருநாடுகள் இடையேயான பிளவை சரிசெய்யும் முதல் மேட்டராக பார்க்கப்படுகிறது.

2 வது மேட்டர் இதுதான்

அதேபோல் நாளை மறுநாள் ஆன்லைன் மூலமாக ‛பிரிக்ஸ்' நாடுகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவும் உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிரிக்ஸில் அங்கம் வகிக்கும் பிரேசில் நாட்டின் அதிபர் லூலா தலைமை வகிக்க உள்ளார். அவரது தலைமையைில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் என்பது டிரம்பின் வரி விதிப்பு பற்றி விவாதிப்பதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. டிரம்புக்கு, பிரிக்ஸ் கூட்டமைப்பை கண்டாலே ஆகாது.

டாலருக்கு எதிராக மாற்று கரன்சியை ‛பிரிக்ஸ்' நாடுகள் கொண்டு வர திட்டமிட்டதால் டிரம்ப் இந்த கூட்டமைப்பை கடுமையாக விமர்சனம் செ்து வருகிறார். தற்போது பிரேசில் அதிபர் லூலா, அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் அதனை சமாளிப்பது பற்றி பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அவர் அந்த கூட்டத்தை புறக்கணிக்கிறார். அவருக்கு பதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தான் பங்கேற்கிறார்.

மோடி பங்கேற்காதது ஏன்?

லூலா நடத்தும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றால் அதன் வீரியம் இன்னும் அதிகரிக்கும். ஆனால் மோடி அதனை தவிர்த்துள்ளார். இதன் பின்னணியில் டிரம்ப் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியா மீது வரியை தீட்டிய டிரம்புக்கு சீனாவுடன் நெருக்கம் காட்டுவது பிடிக்கவில்லை. இப்படியான சூழலில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் மோடி பங்கேற்றால் அது டிரம்பை இன்னும் டென்ஷனாக்கும். ஆனால் மோடி பங்கேற்கவில்லை. இது டிரம்ப் - மோடி இடையேயான அதிகரிக்கும் மோதலை தடுக்கும் வகையில் உள்ளது. இதுவும் டிரம்ப் - மோடி இடையேயான உறவை வலுப்படுத்தும் 2 வது மேட்டராக பார்க்கப்படுகிறது.

இந்த 2 மேட்டரும் கடந்த 24 மணிநேரத்தில் நடந்துள்ளது. இதனால் மீண்டும் இந்தியா - அமெரிக்காவுடன் கைகோர்க்கிறதா?, மோடி - டிரம்ப் இடையேயான நட்பு புத்துயிர் பெறுகிறதா? இந்தியா மீதான வரியை டிரம்ப் ரத்து செய்ய உள்ளாரா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும் தற்போதைய நிலையில் கடந்த சில வாரங்களாக இந்தியாவை அடாவடியாக கடுமையாக விமர்சித்த டிரம்ப் கொஞ்சம் பம்மியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+