இஸ்ரேலில் 17 நேபாளிகளை பிணைக் கைதிகளாக பிடித்த ஹமாஸ் தீவிரவாதிகள்.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
டெல்லி: இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் பெரும் எண்ணிக்கையிலான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். தற்போது இஸ்ரேலில் இருந்து 17 நேபாளிகள் ஹமாஸ் இயக்கத்தின் பிடியில் சிக்கி இருப்பதாகவும் 7 நேபாள நாட்டவர் ஹமாஸ் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஹாசா பகுதியை ஆட்சி செய்யும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான யுத்தம் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆபரேஷன் அல் அக்ஸா புயல் - அல் அக்ஸா வெள்ளம் Al-Aqsa Flood/ Al-Aqsa storm என்ற பெயரில் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் இயக்கத்தின் பாலஸ்தீனர்கள் பெரும் எண்ணிக்கையில் ஊடுருவினர்.

சரமாரி தாக்குதல் நடத்திய ஹமாஸ்: தொடக்கத்தில் 20 நிமிடங்களில் சுமார் 5,000 ராக்கெட்டுகளை சரமாரியாக இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவி தாக்குதல் நடத்தியது ஹமாஸ். இந்தத் தாக்குதலால் இஸ்ரேல் நிலைகுலைந்து போனது. இஸ்ரேல் நகரங்கள் போர் அபாய சைரன்களால் அலறின. ஹமாஸின் இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் பதிலடி: ஹமாஸ் இயக்கத்தின் இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து போருக்கு தயாரான சூழல் என பிரகடனம் வெளியிட்டார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் இயக்க தீவிரவாதிகளை அழித்தொழிக்க இஸ்ரேலும் பதில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இதனால் பாலஸ்தீனத்தின் காஸா, மேற்கு கரை பகுதிகளில் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடத் தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல், காஸா பகுதிகளில் வீதி எங்கும் மரண ஓலங்கள் உலகை உலுக்கி வருகின்றன.
வாழ்த்தும் ஈரான் - அதிர்ச்சியில் உலகம்: ஐநா சபை இருதரப்பும் யுத்தத்தை நிறுத்த அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. நமது பிரதமர் மோடியும் பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். சவூதி அரேபியாவும் இரு தரப்பும் உடனடியாக போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்திருக்கிறது. ஆனால் ஈரானோ, ஹமாஸ் போராளிகளே- வாழ்த்துகள் என ஊக்கப்படுத்தி வருகிறது.
இந்திய தூதரகம் எச்சரிக்கை: இதனிடையே இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
17 நேபாளிகள் பிணைக் கைதிகள்: மேலும் இஸ்ரேலில் நேபாள நாட்டைச் சேர்ந்த 17 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுவிட்டதாக இஸ்ரேலுக்கான நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் நேபாள நாட்டவர் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த தூதரகம் தெரிவித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications