ராமர் பாலம் உண்மையா? இஸ்ரோ வெளியிட்ட முழு வரைபடம்! உள்ளே இருப்பது என்ன?
டெல்லி: கடலுக்குள் உள்ள ராமர் பாலத்தை முழு வடிவத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகத் துல்லியமாக்க உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் பல ஆண்டுகளாக விடை தெரியாமல் இருந்த விசயங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது.
ராமர் பாலம் என்பது ராமேஸ்வரம் கடலுக்கு இலங்கை மன்னார் தீவுக்கு இடையே உள்ள மணல் பாலமாகும். சுமார் 48கிமீட்டர் நீலம் உள்ள இந்தப் பாலம் இயற்கையாகவே சுண்ணாம்பு பாறைகளால் உருவான மிக நீலமானதாகும். தமிழில் ராமர் சேது பாலம் என அழைக்கப்படும் இந்தப் பாலம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ஆதாம் பாலம் என்று அழைக்கப்பட்டது. பைபிள் மற்றும் குர்ஆன் நம்பிக்கையின்படி முதல் மனிதன் ஆதாம் இதன் வழியே இலங்கைக்குப் பயணம் செய்தான் என நம்பப்படுகிறது.

ஆனால் அறிவியல் விளங்களின்படி 7 ஆண்டு முதல் சுமார் 18 ஆயிரம் ஆண்டுகள் மும்பு இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலை மன்னார் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக 'புராஜெக்ட் ராமேஸ்வரம்’ திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்தியப் புவியியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது. அதன்மூலம் இந்தப் பாலம் 600 ஆண்டுகள் முன்னால் உருவாகி இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தியது. 1997 ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. 300 மீட்டர் அகலமும் 12 கிமீட்டர் ஆழமும் 167கி.மீட்டர் நீளமும் கொண்ட இத்திட்டம் வடிவம் பெறுவதற்கு முன்பாகவே இந்து மதத்தின் நம்பிக்கைக்கு எதிராக இந்தப் பாலம் உருவாக்கப்படுவதாகச் சர்ச்சை வெடித்தது. கப்பல் பயண நேரம் இந்தப் பாலத்தால் 30 மணிநேரம் குறையும் என்றும் கணிசமான எரிபொருள் செலவு மிச்சமாகும் என்றும் அந்நிய செலவாணி சேமிக்கப்படும் எனவும் பல தரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டும் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதால் திட்டம் முடங்கியது.
இந்நிலையில் கடலுக்கு அடியில் உள்ள ஆதாம் பாலத்தில் முழு வரைபடத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேப்பிங் எக்சர்சைஸ் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் அசல் வடிவம் கடலுக்கு அடியில் 29 கிமீட்டர் நீளம் உள்ளதாகவும் கடல் பரப்பிலிருந்து 8 மீட்டர் அடியில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்கச் செயற்கைக்கோளிலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி, இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் இப்போது ஆதாம் பாலத்தின் மிக விரிவான வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். அதாவது ராமர் சேது பாலத்தின் முழு வடிவத்தை வெளியிட்டுள்ளனர்.
"நாசா செயற்கைக்கோள் ICESat-2 நீர் ஊடுருவிச் செல்லும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராமர் பாலம் பற்றிய விவரங்களைச் சேகரித்துள்ளனர். பல காலமாக இந்தப் பாலம் பற்றிய பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்த நிலையில் அதைப் புரிந்து கொள்வதற்கான முதல் அறிக்கையாக இதுவே அமைந்துள்ளது. “ஆதாமின் பாலம் மற்றும் அதன் தோற்றம் பற்றிய புரிதலை வலியுறுத்த எங்களின் இந்தக் கண்டுபிடிப்பு உதவுகிறது" என இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் சென்டரின் விஞ்ஞானிகள் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செயற்கைக்கோளானது ஒரு லேசர் அல்டிமீட்டர் மூலம் கடலின் ஆழமற்ற பகுதிகளில் உள்ள எந்தவொரு கட்டமைப்பின் உயரத்தையும் ஃபோட்டான் தொழில்நுட்பம் வழியே அளவிடும். அதாவது தண்ணீரில் ஊடுருவிச் சொல்லக் கூடிய ஒளித்துகள்கள் மூலம் குறிப்பிட்ட பகுதியில் என்ன உள்ளது என்பதை இது தெளிவாகக் காட்சிப்படுத்திவிடும்.
ஆதாம் பாலம் இந்தியாவின் இராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு பகுதியான தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் மன்னார் தீவில் உள்ள தலைமன்னாரின் வடமேற்கு முனை வரை நீண்டு காணப்படுகிறது என்பதை இது தெளிவுபடுத்தி உள்ளது. இந்த ஆய்வு நீருக்கடியில் உள்ள மலைமுகடு, சுண்ணாம்புக் கற்களின் சங்கிலி போன்று தொடர்ச்சியாக நீண்டுள்ள பாதையை முழுமையாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
இந்திய மிகப் பழைமையான இதிகாசம் எனக் கூறப்படும் ராமாயணத்தில், இலங்கையில் ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்பதற்காக ராமர் இலங்கையை நோக்கிப் புறப்பட்டார். அப்போது கடல்வழியே பயணிப்பதற்காகக் குரங்கு படையால் கட்டப்பட்டதுதான் இந்த ராமர் சேது பாலம் என நம்பப்படுகிறது. ராமாயண கதையில் இந்தப் பாலம் மைய பொருளாக இன்றுவரை உள்ளது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பா என்பதைக் கண்டுபிடிக்கக் கடந்த காலங்களில் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. ஜோத்பூர் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த NRSC ஆராய்ச்சியாளர்கள், ஆதாம் பாலம் பற்றிப் பல நுணுக்கமான விவரங்களை அறிந்துகொள்ள வேண்டி நாசா செயற்கைக்கோள் எடுத்த படங்களைக் கொண்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் பாலத்தின் 99.98% பகுதிகள் மிகவும் ஆழமற்ற நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவித்தனர். ஆகவே கப்பல் மூலம் இப்பகுதியை ஆய்வு செய்வது சாத்தியமில்லை என்றும் அறிவித்தனர். மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்திக்கு இடையே 2 அல்லது 3 மீட்டர் ஆழம் கொண்ட 11 குறுகிய கால்வாய்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
புவியியல் சான்று என்ன சொல்கின்றன என்றால்? இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டும் பழங்கால சூப்பர் கண்டமான இருந்த கோண்ட்வானாவின் ஒரு பகுதியாக இது இருந்துள்ளது என்றும் அது டெதிஸ் கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து என்றும், 35-55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நகர்ந்தபோது லாராசியா என்ற மற்றொரு சூப்பர் கண்டத்தில் மோதியது என்றும் கூறுகின்றது. இத்தகைய டெக்டோனிக் செயல்பாடுகளால் அல்லது சிதைவுகளால் கடல் மட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்தத் தரைப்பாலம் உருவாகி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கி.பி 9ஆம் நூற்றாண்டில், பாரசீக கடற்படையினர் இதை 'சேது பந்தாய்’ அல்லது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் கடல் பாலம் என்று குறிப்பிட்டதாகத் தெரிகிறது. அதாவது 1480 ஆம் ஆண்டு வரை இந்தச் சேது பாலம் தண்ணீருக்கு மேல் தெரியும்படி இருந்ததாகவும், புயலின் போது நீரில் மூழ்கியதாகவும் ராமேஸ்வரத்திலிருந்து கோயில்களில் உள்ள பதிவுகள் கூறுகின்றன.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா! -
Election Exclusive: சினேகனுக்கு அடிச்சது யோகம்! எட்டைக் கை காட்டிய கமல்! இரட்டை விரலை தூக்கிய ஸ்டாலின்! மநீம பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications