செல்போன் - இண்டர்நெட்டை பயன்படுத்தாத அஜித்தோவல்.. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பகிர்ந்த ரகசியம்
டெல்லி: தற்போது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன், இண்டர்நெட் வசதிகளை பயன்படுத்துகின்றன. ஆனால் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல் செல்போன் மற்றும் இண்டர்நெட் பயன்படுத்துவது கிடையாது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலுமாக உண்மை. இதுபற்றி அஜித் தோவலே விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் ‛விக்சித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக்' என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்று ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது ஒருவர், ‛‛தற்போது செல்போன்கள் மற்றும் இண்டர்நெட் பயன்பாடு மக்களிடம் அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் நீங்கள் எப்படி மற்றவர்களுடன் தொடர்பில் உள்ளீர்கள்'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு அஜித் தோவல், ‛‛நான் செல்போன்கள் பயன்படுத்துவது இல்லை என்பதை எப்படி நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை. யெஸ். உண்மை தான். செல்போன், இண்டர்நெட் இல்லாமல் என்னால் சமாளிக்க முடிகிறது. பொதுமக்களுக்கு தெரியாத பிற தகவல் தொடர்பு வழிகள் உள்ளன.
அதேவேளையில் பர்ஷனல் விஷயங்கள் தவிர்த்து பிறவற்றுக்கு நான் செல்போன் மற்றும் இண்டர்நெட்டை பயன்படுத்துவது இல்லை.சில நேரங்களில் வெளிநாட்டில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள வேண்டி இருக்கும். அப்போது அதனை பயன்படுத்துவேன்'' என்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் அஜித் தோவல் பேசினார்.
அப்போது அவர், ‛‛இந்த நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்று பேசினார். ‛‛தாக்குதல்கள் மற்றும் அடிமைத்தனத்தின் வேதனை நிறைந்த வரலாற்றிற்கு 'பழிவாங்குவதற்காக' மட்டுமின்றி பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு உட்பட அனைத்து துறைகளிலும் நாம் வலுப்படுத்தி கொள்ள வேண்டும். உண்மையில் நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலி. சுதந்திர இந்தியாவில் பிறந்துள்ளீர்கள். இந்த சுதந்திரம் என்பது சுதந்திர போராட்ட வீரர்களி்ன தியாகத்தால் கிடைத்துள்ளது.
நான் ஆங்கிலேயேர் ஆட்சியின்போது பிறந்தேன். பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். சுபாஷ் சந்திர போஸ் தனது வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டார். மகாத்மா காந்தி சத்தியகிரக போராட்டங்களை நடத்தினார். இப்படி நமது முன்னோர்கள் பாடுபட்டு தியாகம் செய்து நம் நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ளனர்'' என்று கூறியிருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications