ரூ.40 கோடிக்கு வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்ட பிபிசி? பரவும் தகவல் உண்மையா? வருமான வரித்துறை பரபர தகவல்
டெல்லி: பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் தொடர்பான சர்ச்சைக்கு நடுவே பிபிசி அலுவலகங்களில் 3 நாட்கள் வருமான வரி சோதனை நடந்தது. இதற்கிடையே தான் ரூ.40 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததை பிபிசி நிறுவனம் ஒப்புக்கொண்டதாக தகவல் பரவி வரும் நிலையில் தான் தற்போது அதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஊடக சேவை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிபிசி செய்தி நிறுவனம் பிரதமர் மோடி குறித்த 2 ஆவணப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது.

2002 குஜராத் கலவரம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமைச் சட்டம் உட்பட முஸ்லீம்களுக்கு எதிராக பிரதமர் மோடி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அந்த ஆவணப்படத்தில் பிபிசி பதிவு செய்தது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும் பல இடங்களில் தடையை மீறி ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இதற்கிடையே தான் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி மாதம் வருமான வரித்துறையினர் நுழைந்து அதிரடியாக ஆய்வு செய்தனர். பிபிசி நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் இந்தியாவில் அந்த நிறுவனம் சார்ந்த முக்கிய விபரங்கள், ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மொத்தம் 3 நாட்கள் பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள், ஊழியர்களிடம் வருமான வரித்துறையினர் தீவிரமாக விசாரித்தனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதாவது பிரதமர் மோடி குறித்த பிபிசி செய்தி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்ததால் வருமான வரித்துறை மூலம் மிரட்டல் விடுக்கப்படுவதாக சாடினர். இது அந்த சமயத்தில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது. அதன்பிறகு இந்த விவகாரம் அமைதியானது. இதற்கிடையே தான் இந்த சோதனையின்போது பிபிசி தனது வருமானத்துக்கு ஏற்ப வரி செலுத்தவில்லை எனவும், ஆய்வில் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதன் தொடர்ச்சியாக தான் தற்போது கடந்த 2 நாட்களாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதாவது பிபிசி ரூ.40 கோடி வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இதனை பிபிசி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் 2 நாட்களாக பரவி வருகிறது. மேலும் இதுதொடர்பாக பிபிசி நிறுவனம் வருமான வரித்துறைக்கு இ-மெயில் அனுப்பி உள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. இதனால் மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது.
இந்நிலையில் தான் பிபிசி தனது இந்திய வருமானத்தை ரூ.40 கோடி அளவுக்கு குறைத்து வரிஏய்ப்பு செய்ததா? இல்லையா? என்பது குறித்து இந்தியன்எக்ஸ்பிரஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐடி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛வருமான வரித்துறையை பொறுத்தமட்டில் இ-மெயில் இயக்க நடைமுறை என்பது இல்லை. ஆய்வில் கிடைக்கும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு சட்டப்பூர்வமான செயல்முறை உள்ளது.
வரி செலுத்துவார் தங்களின் தவறை உணர்ந்து கொண்டாலும் கூட இந்திய வரிச்சட்டங்கள் அவர்களுக்கு எந்த வகையிலும் மன்னிக்காது. ஏனென்றால் வரிகள் ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டும். இதனால் திருத்தப்பட்ட வருமானத்தை காட்டி மீண்டும் வரி செலுத்த முடியாது. மாறாக வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு அவர்கள் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் '' என்றார்.இதன்மூலம் ரூ.40 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்ததாக பிபிசி நிறுவனம் இ-மெயில் அனுப்பி ஒப்புக்கொண்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என இந்த அதிகாரி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications