துணை ஜனாதிபதி தேர்தல்.. ஜெகதீப் தன்கர் வேட்புமனு தாக்கல்! பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஜெகதீப் தன்கர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெறுகிறது. எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இன்று காலை முதலே வாக்களித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகத் திரெளபதி முர்முவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
அதேபோல துணை குடியரசுத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலமும் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வேட்பு மனுத்தாக்கல்
துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டு இருந்தார். நாளையுடன் (ஜூலை 19) வேட்பு மனு தாக்கல் நிறைவடையும் நிலையில், துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஜெகதீப் தன்கர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அப்போது பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உடன் இருந்தனர்.

ஜெகதீப் தன்கர்
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவில் மிக நீண்ட காலம் பணியாற்றி வந்தவர் ஜெகதீப் தன்கர். அதைத் தொடர்ந்து அவர் மேற்கு வங்க ஆளுநராகவும் ஜெகதீப் தன்கர் இருந்தார். முன்னதாக இன்றைய தினம் ஜெகதீப் தன்கர், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களை சந்தித்து துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு திரட்டினார். அப்போதும் பிரதமர் நரேந்திர மோடி அவருடன் இருந்தார்.

மார்கரெட் ஆல்வா
இந்தத் தேர்தலில் ஜெகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வாவுக்கு கர்நாடகா மாநிலம் மங்களூரு சொந்த ஊராகும். இவர் பல்வேறு காலகட்டங்களில் மத்திய அமைச்சராகவும் ஆளுநராகவும் பணியாற்றியவர். இவரும் விரைவில் வேட்புமனுத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications