பைக்கில் வந்த 2 பேர்.. ஜாமியா மிலியா பல்கலையில் மீண்டும் துப்பாக்கி சூடு.. தலைநகரில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    செய்தி தெரியுமா | 03-02-2020 | oneindia tamil Morning news

    டெல்லி: டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இரண்டு மர்ம நபர்கள் பல்கலைக்கழக கேட் அருகே துப்பாக்கி சூடு நடத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

    டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்தது. அவர்கள் சார்பாக நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    Jamia Firing: Third shooting reported in the University campus, Police investigates

    அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் கடந்த வாரம் உள்ளே புகுந்த நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். பின்பக்கம் போலீஸ் இருப்பதும் தெரிந்தும் அவர் மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.

    அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார்.இந்த மாணவர், காஷ்மீரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் ராம் பகத் கோபால். இவர் 18 வயது கூட நிரம்பாத சிறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இவரை போலீசாரை 14 நாட்கள் காவலில் எடுத்துள்ளார். இந்த நிலையில் அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலை அருகே இருக்கும் ஷாகீன் பாக் பகுதியிலும் துப்பாககி சூடு நடந்தது. அங்கு சிஏஏவிற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

    சிஏஏவிற்கு எதிராக பெண்கள் கடந்த ஒரு மாதமாக போராடி வருகிறார்கள்.இதை எதிர்க்கும் விதத்தில் இந்துத்துவா இளைஞர் ஒருவர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினார். இவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இரண்டு மர்ம நபர்கள் பல்கலைக்கழக கேட் அருகே துப்பாக்கி சூடு நடத்தியதாக மாணவர்கள் புகார் எழுந்துள்ளது.

    சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது முறையாக துப்பாக்கி சூடு நடக்கிறது. மொத்தம் இரண்டு நபர்கள் பைக்கில் வந்து துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து இருந்தார் எனப்படுகிறது.

    இது தொடார்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படும் இடத்தில், குண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மாணவர்கள் வெவ்வேறு தகவல்களை அளிப்பதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+