காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க வழக்கு.. அரசியல் சாசன அமர்விற்கு மாற்றம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் தற்போது அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் தற்போது அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதேபோல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. கடந்த 73 வருடங்களாக காஷ்மீருக்கு இந்த 370வது சட்டப்பிரிவுதான் பெரிய அளவில் சிறப்பு அதிகாரம் வழங்கி வந்தது.

தற்போது அந்த சிறப்பு அதிகாரத்தையே மத்திய அரசு நீக்கி இருக்கிறது. இதனால் காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இப்போதும் காஷ்மீர் எல்லையில் அதிக அளவில் ராணுவம் நிறுத்தப்பட்டு வருகிறது.
அங்கு உள்ள அரசியல் தலைவர்கள் எல்லோரும் இப்போதும் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த சிறப்பு அங்கீகாரம் நீக்கம் மற்றும் ராணுவ கட்டுப்பாடு இரண்டிற்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 14 மனுக்கள் மீது இன்று விசாரணை நடந்தது.
வழக்கறிஞர் எம். எல். சர்மா, காஷ்மீரை சேர்ந்த செய்தியாளர் அனுராதா பாஸின் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் என்று நிறைய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இதில் வழக்கறிஞர் எம். எல். சர்மா, ஷேலா ரஷித், ஷா பசல் ஆகியோர் காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரத்தை நீக்கியது தவறு என்று வழக்கு தொடுத்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெட்ச்சூரி அங்கு கைது செய்யப்பட்டு இருக்கும் அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏ போட்பே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த இதே அமர்வு, காஷ்மீரில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று முக்கியமான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது .
அதன்படி இந்த காஷ்மீர் பிரச்சனையில் 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு வழக்கு மாற்றப்படுகிறது.
வரும் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து வழக்கு மீதான விசாரணை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications