ஜூலை 11! இனி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா இல்லை.. தொண்டர்கள் வேதனை

அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்ற விதியை நீக்கியதும் செல்லும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் ஓ பன்னீர் செல்வத்தை நீக்கியதும் செல்லும், அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை நீக்கியதும் செல்லும்.

அதிமுகவில் ஒற்றை தலைமைக்காக ஒரு யுத்தமே நடைபெற்று முடிந்துள்ளது. ஜூன் 23 ஆம் தேதி முதல் இன்று வரை அவ்வப்போது நீதிமன்ற கதவுகளை நீதிக்காக தட்டிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வும் செல்லும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக் குழு செல்லும்

அதிமுக பொதுக் குழு செல்லும்

அதிமுக பொதுக் குழு செல்லும் என்றால் அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். இதைத்தான உயர்நீதிமன்றத்தின் இரட்டை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர். இதை முன் வைத்துதான் உச்சநீதிமன்றமும் இன்று தீர்ப்பளித்தது.

தீர்மானங்கள்

தீர்மானங்கள்

ஜூலை 11 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன தெரியுமா? அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அது போல் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அது போல் அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்ட விதி நீக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்

ஒருங்கிணைப்பாளர்

இவை அல்லாது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அந்த பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும். எனவே இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செல்லும்.

அதிமுகவிலிருந்து நீக்கம்

அதிமுகவிலிருந்து நீக்கம்

ஓபிஎஸ்ஸை அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செல்லும். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற விதி அகற்றப்பட்டதும் செல்லும் என்பதாகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தத்தை அடுத்து அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. அப்போது ஓபிஎஸ்ஸும் எடப்பாடியும் பொதுக் குழு கூட்டத்தை கூட்டி பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கினர். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். எனவே அந்த பதவிக்கு நிகரான அதிகாரங்களை படைத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை பதவி உருவானது. இந்த நிலையில் இந்த இரு பதவிகளும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற விதியும் கடந்த ஜூலை 11 பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பு

ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். மேலும் சசிகலா பொதுச் செயலாளர் என்ற வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே இது எடப்பாடிக்கு கிடைத்த முழு வெற்றி அல்ல என்றும் சிலர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தீர்ப்பை எண்ணி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்த தீர்ப்பு அற்புதமான தீர்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+