பொறியியல் படிப்புகளுக்கான.. ஜேஇஇ 3ம் கட்ட நுழைவு தேர்வில் மாற்றம்.. புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு
டெல்லி: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் நுழைவு தேர்வின் மூன்றாவது கட்ட தேர்வுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 20 முதல் 25 தேதி வரை நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 20, 22, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. மாணவர்களின் வசதிக்காக இந்த கல்வியாண்டில் ஜேஇஇ தேர்வுகள் 4 கட்டங்களாக பிரித்து நடத்தப்படுகின்றன.இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட ஜேஇஇ தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. முதல் இரண்டு கட்ட தேர்வுகள் முடிந்த நிலையில் 3 மற்றும் 4ம் கட்ட தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி மூன்றாவது கட்ட தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் ஜூலை மாதம் தள்ளி வைக்கப்பட்டது.
ஜூலை 20 - 25 தேதி வரை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது ஜூலை 20, 22, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மூன்றாம் கட்ட தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கொரோனா காலம் என்பதால் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 232ல் இருந்து 334 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல் தேர்வு நடக்கும் மையங்களின் எண்ணிக்கை 660ல் இருந்து 828 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 7,09,519 பேர் மூன்றாம் கட்ட தேர்வை எழுத உள்ளனர்.
பொறியியல் படிப்புகளுக்கான நான்காம் கட்ட ஜேஇஇ தேர்வுகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடக்க உள்ளன. கொரோனா விதிகளை பின்பற்றி இந்த ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கான விண்ணப்ப அவகாசம் ஏற்கனவே முடிந்துவிட்டது. மூன்றாம் கட்ட தேர்வு எழுத உள்ளவர்கள் தங்கள் அட்மிட் கார்டை jeemain.nta.nic.in என்ற இணைய பக்கத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications