கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது ஜேஇஇ தேர்வுகள்!
டெல்லி: பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகள் இன்று முதல் வரும் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று தேர்வுகள் தொடங்குகின்றன.
ஐஐடி, என்ஐடி, மத்திய அரசின் நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பயில்வதற்காக ஜேஇஇ எனும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது.

அது போல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும் வரும் 13-ஆம் தேதி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதி, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த இரு தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு, வெள்ள பாதிப்புகளால் இந்த தேர்வுகளை ஒத்தி வைக்க புதுவை, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளன.
தேர்வுகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்கும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த நிலையில் ஜேஇஇ மெயின் தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.
இந்த தேர்வை எழுத 16 லட்ச மாணவர்கள் பதிவு செய்துள்ளார்கள். மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுத மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறுகிறது. ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் http://eduride.in என்ற இணையதளம் மூலம் போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளை பெறலாம் என ஐஐடி மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் ஒரு போர்ட்டலை தொடங்கியுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications