ஜார்க்கண்ட் எக்சிட் போல் 2024.. அடித்து தூக்கும் பாஜக! இந்தியா கூட்டணிக்கு பலத்த அடி.. ஜேவிசி கணிப்பு
டெல்லி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ஜேவிசி நடத்திய கருத்துக்கணிப்பில் ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. இந்தியா கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளது.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்க்ண்ட் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் கடந்த 13 ஆம் தேதி 43 தொகுதிகளிலும், இரண்டாம் கட்ட தேர்தல் 20 ஆம் தேதி (இன்று) நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.

தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில், பல்வேறு முன்னணி செய்தி ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி ஜேவிசி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 40 முதல் 40 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 30- 40 தொகுதிகளையும் பிடிக்கும் என்று கணித்துள்ளது.
ஜார்க்கண்டில் மொத்த தொகுதிகள்: 81
பெரும்பான்மைக்கு: 42
ஜேவிசி டிவி கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி - 40 -44
இந்தியா கூட்ட்டணி - 30 - 40
பிற - 1
ஜார்க்கண்டை பொறுத்தவரை இதுவரை 5 சட்டமன்ற தேர்தலை கண்டுள்ளது. தற்போது நடைபெற்றது 6-வது சட்டசபை தேர்தலாகும். பீகார் மாநிலத்தில் இருந்து கடந்த 2000 ஆம் ஆண்டுதான் ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டது. ஜார்க்கண்டில் அடிக்கடி அரசியல் குழப்பங்கள் ஏற்படும் இடமாக உள்ளது. இதுவரை 7 முதல்வர்களை அந்த மாநிலம் கண்டுள்ளது.
ஆட்சி மாற்றம் என்பது 9 முறை ஏற்பட்டுள்ளது. பாஜக 4 முறையும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை 5 முறையும் ஆட்சி செய்துள்ளது. ஒரே சட்டசபையின் பதவிக்காலத்திற்குள் பெரும்பான்மை பலம் இல்லாததால் அரசு கவிழ்ந்து எதிர்க்கட்சி ஆட்சி அமைத்து இருக்கிறது. 5 முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. 3 முறை ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications