ஜார்க்கண்டில் பெரிய ட்விஸ்ட்! யாருக்கும் மெஜாரிட்டி இல்லை! தொங்கு சட்டசபை அமைகிறதா? கருத்துக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி என யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளதாகவும் தைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பீகாரில் இருந்து கடந்த 2000 ஆம் ஆண்டில் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது ஜார்க்கண்ட். கனிம வளங்கள் நிறைந்த ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் பாஜகவும் செல்வாக்கு மிக்க கட்சிகளாக உள்ளன. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கும் இங்கு கணிசமான வாக்கு வாங்கி உள்ளது.

exit poll 2024 jharkhand exit polls 2024 bjp

இதுவரை 5 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்து இருக்கும் ஜார்க்கண்டில், பாஜகவும், ஜார்க்கண்ட் முக்த்தி மோர்ச்சா கட்சிகளும் மாறி மாறி கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்து வந்திருக்கின்றன. அடிக்கடி அரசியல் குழப்பங்களை சந்திக்கும் இந்த மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளில் பாஜகவைச் சேர்ந்த பாபுலால் மராண்டி, அர்ஜூன் முண்டா, ரகுபர்தாஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சிபு சோரன், அவரது மகன் ஹேமந்த் சோரன், சம்பாய் சோரன் மற்றும் மதுகோடா என்ற சுயேச்சை என 7 பேர் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். 3 முறை ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இந்திய கூட்டணிக்கும், பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகிய சம்பாய் சோரன், பாஜகவில் இணைந்து இருக்கிறார். இதனால், ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அனல் பறந்துள்ளது. இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் பல கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜகவே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. தைனிக் பாஸ்கர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், தொங்கு சட்டசபை அமையும் என்று தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி என யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கணித்துள்ளது.

ஜார்க்கண்டில் மொத்த தொகுதிகள்: 81
பெரும்பான்மைக்கு: 42

ஜேவிசி டிவி கருத்துக்கணிப்பு
பாஜக கூட்டணி - 37 - 40
இந்தியா கூட்ட்டணி - 36 - 39
பிற - 0 - 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+