ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் பதவியேற்பு!படை திரளும் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்!
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கேற்க உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34; காங்கிரஸ் 16; ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களில் வென்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்ககு தேவை 41. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 54 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பாஜக 21 இடங்களில்தான் வெல்ல முடிந்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளில் எந்த ஒரு ஆளும் கட்சியும் அடுத்த தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது கிடையாது. தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் பெரும் ஆதரவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக நாளை மறுநாள் ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்க இருக்கிறார். 2013-ம் ஆண்டு முதன் முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்; 2019-ம் ஆண்டு மீண்டும் சட்டசபை தேர்தலில் வென்று முதல்வரானார் ஹேமந்த் சோரன். பின்னர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது இடைக்கால முதல்வராக சம்பாய் சோரன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையாகி வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில் தற்போது தேர்தலில் மீண்டும் வென்று 4-வது முறையாக மாநிலத்தின் முதல்வராக நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார்.
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications