ரீசார்ஜ் கட்டணம் எகிறிடுச்சு.. கட்டண உயர்வை அறிவித்தது ஜியோ! இனி எவ்வளவு ரீசார்ஜ் பண்ணனும் தெரியுமா?
டெல்லி: நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளது ஜியோ நிறுவனம். 25% வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்டுள்ள கட்டண விவரங்களை இங்கே முழுமையாக பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 19 பிளான்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கட்டண உயர்வு ஜூலை 3, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ரீசார்ஜ் கட்டண உயர்வு: ரூ. 155 ஆக இருந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 189 ஆக உயர்த்தப்படுகிறது. அதாவது, இந்த ரீசார்ஜ் கட்டணம் சுமார் 22% உயர்கிறது. ஜியோ நிறுவனம் 19 பிளான்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அவற்றில் 17 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள்.
தினசரி 1 ஜிபி நெட் வழங்கும் திட்டமானது ரூ. 209 ஆக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 249 ஆக உயர்த்தப்படுகிறது. ரூ. 239 ஆக இருந்த தினசரி 1.5 ஜிபி நெட் பேக் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 299 ஆக உயர்த்தப்படுகிறது.
50 ரூபாய் உயர்வு: ரூ. 299 ஆக இருந்த தினசரி 2 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 349 ஆக உயர்த்தப்படுகிறது. ரூ. 349 ஆக இருந்த தினசரி 2.5 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 399 ஆக உயர்த்தப்படுகிறது.
ரூ. 399 ஆக இருந்த தினசரி 3 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 449 ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல, 2 மாத வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் பிளான்களான 479 ரூபாய், 533 ரூபாய் திட்டங்கள் முறையே, 579 ரூபாய், 629 ரூபாய் பிளான்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ரூபாய் 2,999 ரூபாய்க்கு ஆண்டு முழுவதும் தினசரி 2.5 ஜிபி இணைய வசதியோடு சேவை வழங்கப்பட்ட நிலையில் அது ரூ. 3,599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1,559 ரூபாய்க்கு 336 நாட்களுக்கு வழங்கப்பட்ட சேவை இனி 1,899 ஆக அதிகரித்துள்ளது.
ஜூலை 3 முதல்: ரிலையன்ஸ் ஜியோவின் அன்லிமிட்டெட் 5 ஜி திட்டம் ஜூலை 3 ஆம் தேதி முதல் கிடைக்கும் எனவும், புதிய கட்டண விலை உயர்வு வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடைசியாக கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தி இருந்தன. இப்போது சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 5ஜி உட்கட்டமைப்புகாக அதிக அளவில் முதலீடுகள் செய்துள்ளதால் அதனை ஈடுகட்ட, ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்களின் கட்டணம், அதாவது மொபைல் ரீசார்ஜ் கட்டணம் 17 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் ஜியோ நிறுவனம் முதல் ஆளாக, கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய வசதிகள்: கட்டண உயர்வுடன், JioSafe மற்றும் JioTranslate ஆகிய வசதிகளையும் ஜியோ அறிவித்துள்ளது. JioSafe என்பது அழைப்பு, செய்தி அனுப்புதல், கோப்பு பரிமாற்றம் மற்றும் பலவற்றிற்கான குவாண்டம்-பாதுகாப்பான தகவல் தொடர்பு பயன்பாடாகும், இது மாதத்திற்கு ரூ.199க்கு கிடைக்கும். ஜியோ டிரான்ஸ்லேட் என்பது குரல் அழைப்பு, குரல் செய்தி, உரை மற்றும் படத்தை மொழிபெயர்ப்பதற்கான பல மொழி தொடர்பு பயன்பாடாகும், இது மாதத்திற்கு ரூ.99.
ஏர்டெல், வோடஃபோன்: செல்போன் சேவை கட்டண உயர்வைப் பொறுத்தவரை எப்போதும் முதலில் ஒரு நிறுவனம் உயர்த்தினால் மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திவிடும். அந்தவகையில் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது












Click it and Unblock the Notifications