டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்து மதத்திற்கு எதிராக பேசினார்கள்.. தாக்கினோம்.. ஜேஎன்யூ தாக்குதலுக்கு இந்து ரக் ஷா தளம் பொறுப்பு

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலுக்கு இந்து ரக் ஷா தளம் என்ற சிறிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்து மதத்திற்கு எதிராக பேசினார்கள்.. தாக்கினோம்.. ஜேஎன்யூ தாக்குதலுக்கு இந்து ரக் ஷா தளம் பொறுப்பு - வீடியோ

    டெல்லி: டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலுக்கு இந்து ரக் ஷா தளம் என்ற சிறிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது

    இந்தியாவில் அதிக ஆராய்ச்சி மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம்தான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக ஜேஎன்யூ பார்க்கப்படுகிறது.

    இங்கு நேற்று முதல்நாள் மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் நேற்று முதல்நாள் மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள்.

    விடுதி காவலரை தாக்கிவிட்டனர்.. ஜேஎன்யூவின் மாணவர் சங்க தலைவர் உட்பட 19 பேர் எப்ஐஆர் பதிவு!விடுதி காவலரை தாக்கிவிட்டனர்.. ஜேஎன்யூவின் மாணவர் சங்க தலைவர் உட்பட 19 பேர் எப்ஐஆர் பதிவு!

    கேரளா

    கேரளா

    இந்த தாக்குதலுக்கு எதிராக நாடு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலை நடத்தியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களும் நிறைய வெளியானது. இந்த தாக்குதலில் மாணவர்கள் மிக மோசமாக காயம் அடைந்தனர்.

    பொறுப்பு

    30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்து ரக் ஷா தளம் பொறுப்பேற்றுள்ளது. நாங்கள்தான் ஆட்களை அனுப்பி அங்கு மாணவர்களை தாக்கினோம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹிந்து ரக் ஷா தள அமைப்பின் தலைவரான பூபேந்திர தோமர் என்ற பிங்கி செளதரி இந்த பேட்டியை அளித்துள்ளார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    பிங்கி செளதரி தனது வீடியோவில், தேசவிரோத, இந்து விரோத நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்துவிட்டது. ஜேஎன்யூவில், இது போல அதிகமாக நடைபெற்றதால், இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இதனால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் எங்கள் மூலம்தான் நடத்தப்பட்டது.

    என்ன விசாரணை

    என்ன விசாரணை

    தேச விரோத நடவடிக்கைகள், வேறு எந்த பல்கலைக்கழகங்களில் நடைபெற்றாலும் நாங்கள் அங்கும் அநியாயத்தை தட்டிக்கேட்போம். அங்கு நாங்கள் செல்வோம். அங்கும் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். தற்போது டெல்லி போலீஸார் இவர் குறித்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

    English summary
    JNU attack: Hindu Raksha Dal group takes credit for the attack on the students.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X