எங்களுக்கு பயம் இல்லை.. ஜேஎன்யூவில் கொதித்த தீபிகா படுகோன்.. சூப்பர் ஸ்டார்களுக்கு எடுத்த பாடம்!
எங்களுக்கு பயம் இல்லை, எங்கள் குரலை நாங்கள் உரக்க வெளிப்படுத்துவோம் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் டெல்லி ஜேஎன்யூ போராட்டத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: எங்களுக்கு பயம் இல்லை, எங்கள் குரலை நாங்கள் உரக்க வெளிப்படுத்துவோம் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் டெல்லி ஜேஎன்யூ போராட்டத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் முன் நடந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நேற்று மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது.
முகமூடி அணிந்த கும்பல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இதற்கு எதிராக நேற்று இரவு ஜேஎன்யூவில் போராட்டம் நடந்தது.

என்ன போராட்டம்
இந்த நிலையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், நேற்று ஜேஎன்யூவில் தாக்கப்பட்ட மாணவர்களை சென்று நேரில் சந்தித்தார். ஜேஏன்யூ மாணவர் சங்க தலைவர் ஐஷா கோஷ் உடன் அவர் பேசினார். அவரின் இந்த வருகை அங்கிருந்த மாணவர்களை நெகிழ வைத்தது.

பெரிய பாலிவுட்
பெரிய பெரிய பாலிவுட் நடிகர்கள் கூட அரசியல் காரணங்களுக்காக மாணவர்களை வந்து சந்திக்கவில்லை. இந்த தாக்குதலுக்கு குறைந்த பட்சம் இவர்கள் எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை. நடிகர் சித்தார்த், இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகிய இருவர் மட்டுமே இதில் குரல் கொடுத்து வருகிறார்கள்.

தீபிகா எப்படி
தற்போது அவர்களுடன் தீபிகா படுகோன் இணைந்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தீபிகா படுகோன், நாங்கள் பயப்படவில்லை. எங்கள் குரலை எங்களால் தைரியமாக வெளிப்படுத்த முடிகிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

எதிர்காலம்
நாங்கள் இந்த நாட்டின் நன்மை பற்றியும் எதிர்காலம் பற்றியும் சிந்திக்கிறோம். எங்களின் பார்வை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மக்கள் நன்மைக்காக நாங்கள் தெருவில் இறங்கி போராட வருகிறோம்.எங்கள் குரலை நாங்கள் உரக்க வெளிப்படுத்துவோம் . என்னை போல மற்ற பிரபலங்களும் களமிறங்க வேண்டும் என்று தீபிகா கோரிக்கை வைத்துள்ளார்.

பாலிவுட்
இந்த விஷயம் குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், கபூர் நடிகர்கள் என்று யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் தனி பெண்ணாக களமிறங்கி தீபிகா இவர்களுக்கு பாடம் எடுத்து இருக்கிறார். தீபிகாவுக்கு எதிராக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications