ராமர் கோவில் விழா.. ஆன்லைனில் ஸ்ரீ ராம மந்திரங்களை நீங்களும் சொல்லலாம்.. ஜோஷ் வழங்கும் அரிய வாய்ப்பு
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆன்லைன் மூலம் நீங்களும் ஸ்ரீ ராம் மந்திரங்களை ஜெபிக்கும் அரிய வாய்ப்பை ஜோஷ் செயலி வழங்கி உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்று வருகிறது. இன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.
இன்று திறக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி இன்று ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார். இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
திறப்பு விழா: ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.
நாடு முழுக்க இந்த விழாவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மொத்த நாடுமே இந்த விழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
மந்திரங்களை ஜெபிக்கலாம்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆன்லைன் மூலம் நீங்களும் ஸ்ரீ ராம் மந்திரங்களை ஜெபிக்கும் அரிய வாய்ப்பை ஜோஷ் செயலி வழங்கி உள்ளது. ஜோஷ் செயலி மூலம் Shri Ram Chant Room உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் உங்கள் பெயரை முதல் [பக்கத்தில் பதிவிடலாம். அதன்பின் வரும் பக்கத்தில் நீங்கள் எத்தனை முறை மந்திரத்தை சொல்ல நினைக்கிறீர்கள் என்று கூறலாம். அதன்பின் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மந்திரத்தை சொன்ன பின் நீங்கள் மந்திரம் கூறியதற்கான சர்டிபிகேட் வழங்கப்படும். இந்த பக்கத்தில் 1.1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம் என்று கோஷமிடுகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் ஆரோக்கியம், வெற்றி, வளர்ச்சி, பொருளாதாரம் பெருகும் என்பது நம்பிக்கை. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும் இந்த நன்னாளில் உடனே இந்த லிங்கை கிளிக் செய்து.. ராமர் மந்திரங்களை ஜெபித்திடுங்கள்.












Click it and Unblock the Notifications