14 திருத்தங்களுடன்.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை இறுதி செய்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு
டெல்லி: வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு நாடாளுன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 14 திருத்தங்களுடன் இந்த மசோதாவிற்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த அனைத்து பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. வக்பு வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்தல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
வக்ஃப் சட்டம், 1995ல் திருத்தம் கொண்டுவரும் புதிய மசோதாவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தார்.. பெரும்பாலும் சட்டங்களில் திருத்தம் செய்தால் ஒன்று, இரண்டு திருத்தங்களை மேற்கொள்ளப்படும். அதிகபட்சம் 10 திருத்தங்கள் கூட செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் 44 திருத்தங்களுடன், வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்கும் சட்டமான வக்ஃப் சட்டத்தில் உள்ள பல ஷரத்துகளை ரத்து செய்ய வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாமிய பெண்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது உட்பட, பல மாற்றங்களை இந்த சட்டத்தில் செய்யப்பட்டு இருந்தது. மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இந்த சட்ட மசோதாவை ஆய்வு நாடாளுமன்ற் கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவிற்கு பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைவராக இருந்தார்.
இந்தக் குழுவில் நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த குழுவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 16 எம்பிக்களும் எதிர்க்கட்சிகளுக்கு 10 எம்பிக்களும் உள்ளனர்.
14 திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதற்கான வாக்கெடுப்பு வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு வரும் 31 ஆம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். முன்னதாக இந்த குழு, தனது அறிக்கையை நவம்பர் 29 ஆம் தேதி சமர்பிக்க இருந்தது. எனினும், இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 13 வரை நீட்டிக்கப்பட்டது. அதவது பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாள் வரை நீட்டிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறியதாவது:- 44 திருத்தங்கள் ஆலோசிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக விரிவான ஆலோசனை நடைபெற்றது. அனைத்து உறுப்பினர்களிடமும் திருத்தங்கள் கோரினார்கள். இன்று நடைபெற்றதுதான் இறுதி ஆலோசனைக் கூட்டம். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.எதிர்க்கட்சிகளும் திருத்தங்களை பரிந்துரைத்தார்கள். அனைத்தும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் விழுந்தன" என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications