பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு!
Recommended Video
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்படார். அவருக்கு பாஜக மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி 2014-ல் அதிகாரத்தை கைப்பற்றியது, அப்போது பாஜகவின் தலைவராக ராஜ்நாத்சிங் இருந்தார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத்சிங் உள்துறை அமைச்சரானார்.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் புதிய தேசிய தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டார். 2019 லோக்சபா தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.

புதிய தலைவர்
பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் பாஜக தலைவரான அமித்ஷா, உள்துறை அமைச்சரானார். இதனால் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பாஜக செயல் தலைவர்
இதன் முதல் கட்டமாக பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாஜகவின் உட்கட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டன.

பாஜக தேர்தல்கள்
பாஜகவின் மாநில தலைவர்கள் ஒன்று கூடிதான் தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காக காலியாக இருந்த பாஜகவின் மாநில தலைவர் பதவிகள் நிரப்பப்பட்டன.

இன்று வேட்புமனு
பின்னர் பாஜகவின் தேசிய தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் சிங் வெளியிட்டார் அதில், தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெறும்; வேட்புமனுக்கள் பரிசீலனை, திரும்பப் பெறுதல் அனைத்தும் பகல் 2.30 மணிக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் ஜேபி நட்டா
இதனடிப்படையில் ஜே.பி. நட்டா இன்று பாஜக தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருக்காக பாஜக மூத்த தலைவர்கள் பலரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். பின்னர் பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு?












Click it and Unblock the Notifications