நீதிபதிகளும் மனிதர்கள் தான்.. தீர்ப்பில் தவறு செய்ததை வெளிப்படையாக சொன்ன நீதிபதி
டெல்லி: நீதிபதிகளும் மனிதர்கள்தான். தீர்ப்பின்போது அவர்களும் தவறு செய்யலாம். என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அபே ஓகா கூறியுள்ளார். அவர் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஒரு வழக்கில் தவறு செய்துவிட்டதாக ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள அபே எஸ் ஓகா டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தேன். அப்போது குடும்ப வன்முறை சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் நான் தவறு செய்தேன்.

நீதித்துறை என்பது தினம் தினம் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொடுக்கும் என்று கூறியுள்ளார். அதாவது, குடும்ப பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நிவாரணம் வேண்டி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். பிரிவு 12 (1) இன் படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்குவதற்கான உத்தவை நீதிபதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், நீதிபதி அபே ஓகா அந்த தீர்ப்பை வழங்காமல் வழக்கை முடித்து வைத்துள்ளார்.
இது தவறு என்பது பின் நாட்களில் நீதிமன்றத்தால் கண்டறியப்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம், "குடும்ப வன்முறைச் சட்டம் என்பது குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதி வழங்குவதற்காக இயற்றப்பட்ட சிறப்பு சட்டம். இதை உயர் நீதிமன்றங்கள் மனதில் வைத்து தீர்ப்பு வழங்க வேண்டும்." என்று தெளிவுபடுத்தியிருந்தது. நீதிபதி அபே ஓகாவின் தீர்ப்புக்குப் பிறகே இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது.
மேலும், நீதிபதிகளுக்கு கற்றல் செயல்முறை எப்போதும் தொடரும்." என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. "குடும்ப வன்முறைச் சட்டம் 12 (1) பிரிவின் கீழ் தீர்ப்பளிக்கும்போது உயர் நீதிமன்றங்கள் கவனமுடன் இருக்க வேண்டும்." என்றும் அறிவுறுத்தியிருந்தது.
இந்த விஷயங்களை தற்போது மேற்கோள் காட்டிப் பேசிய நீதிபதி அபே ஓகா, "நீதிபதிகளும் மனிதர்கள் தான். அவர்களும் தவறு செய்வார்கள். தீர்ப்பில் அவர்களும் தவறு செய்வார்கள்." என்று தன்னுடைய தீர்ப்பில் இருந்த தவறை வெளிப்படையாக பேசியுள்ளார். அவரின் கருத்து தற்போது சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
அவரது கருத்தை ஆதரிக்கும் வகையில் சிலர், "நீதிபதி வெளிப்படையாக பேசியதை வரவேற்கிறோம்." என்று கூறுகின்றனர். அதேநேரத்தில், "சில நீதிபதிகள் தங்களை கடவுளை விட உயர்ந்தவர்களாக நினைக்கிறார்கள். எனவே நீதிபதிகள் தவறு செய்து, அதனால் நீதியும் கிடைக்காமல் போனால் அதற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்." என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications