உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக... தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 31 பேர் நீதிபதிகளாக பதவி வகிக்கலாம், ஆனால் தற்போது 26 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.

Judges Dinesh Maheshwari and Sanjeev Khanna have been sworn in as Supreme Court judges.

இதையடுத்து கடந்த 10- ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் கூட்டத்தில், கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஷ்வரி மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று காலை பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+