பீகாரில் இனி காட்டாட்சி ஒருபோதும் வரவே வராது - வெற்றி கொண்டாட்டத்தில் ஆர்ஜேடி - காங்., விளாசிய மோடி
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ‛‛நாம் மக்களின் ஊழியர்கள். மக்களின் இதயங்களை நாங்கள் திருடிவிட்டோம். அதனால் தான் முழு பீகாருரும் என்டிஏ-வை ஆதரித்துள்ளது. இது ஜனநாயகத்துக்கான வெற்றி. ஜனநாயகத்தில் வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு நம்பிக்கையில்லை. வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். பீகார் பூமியில் இனி காட்டாட்சி ஒருபோதும் திரும்பவராது. பீகாரில் இனி காட்டாட்சி வரவே வராது'' என்று பிரதமர் மோடி கூறினார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பீகாரில் மீண்டும் பாஜகவின் கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது.

இதனால் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் ஹேப்பியாகி உள்ளனர். நாடு முழுவதும் இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் பாஜகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக மோடி வருகை புரிந்தார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மோடியை நோக்கி மலர்தூவி வரவேற்றனர். மேலும் மோடி.. மோடி.. என உற்சாகமாக கோஷமிட்டனர். அதன்பிறகு பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர்கள் கூறியதாவது:
‛‛நாம் மக்களின் ஊழியர்கள். கடின உழைப்பால் மக்களை மகிழ்வித்து வருகிறோம். மக்களின் இதயங்களை நாங்கள் திருடிவிட்டோம். அதனால் தான் முழு பீகாருரும் என்டிஏ-வை ஆதரித்துள்ளது. இதனை இன்றைய பீகார் தேர்தல் முடிவு தெளிவுப்படுத்தி உள்ளது. பீகார் தேர்தலில் கிடைத்த வெற்றி பாஜகவுக்கானது இல்லை. இது ஜனநாயகத்துக்கான வெற்றி. அதிக வாக்குப்பதிவு தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த வெற்றி. நிதிஷ் குமாரின் தலைமை சிறப்பாக நடந்தது. பீகார் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பீகாரில் உள்ள பெண்கள், இளம் வயதினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வலிமையான நம்பிக்கையை வைத்துள்ளனர். தேர்தலில் அதிக வாக்கு பதிவானது இதனை உறுதி செய்துள்ளது. . இது தேர்தல் ஆணையத்துக்கு வலிமையை தந்துள்ளது. பீகாரில் மறுவாக்குப்பதிவுக்கான தேவை இல்லை. பீகாரில் இம்முறை மறுவாக்குப்பதிவு எதுவும் நடைபெறவில்லை. முதன் முறையாக வாக்குப்பதிவின்போது வன்முறைஇல்லை. மக்களின் நம்பிக்கை வெற்றி பெற்றுள்ளது. மக்கள் வளர்ச்சியை மட்டுமே விரும்புகின்றனர்.
ஜனநாயகத்தில் வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு நம்பிக்கையில்லை. வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். பீகார் பூமியில் இனி காட்டாட்சி ஒருபோதும் திரும்பவராது. பீகாரில் சிவப்பு தீவிரவாதத்தால் மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர். பீகாருக்கு எதிர்க்கட்சிகள் அவப்பெயரை மட்டுமே தந்துள்ளனர். பீகார் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
பீகாரில் ரயில்வே திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக இருந்தனர். மக்களை தேர்தல் மட்டுமின்றி பிற சட்டசபை தேர்தல்களில் வரலாற்று வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளோம். மத்தியில் 3வதுமுறையாக ஆட்சியமைக்க மக்கள் ஆதரவளித்தனர். ஹரியானாவிலும் 3வது முறை வெற்றி பெற்றோம். அம்பேத்கர், சாவர்கள் பிறந்த புண்ணிய பூமியான மகாராஷ்டிராவிலும் வெற்றி பெற்றோம். டெல்லியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளோம். நாட்டின் மூலை முடுக்குகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணியை விரும்புகின்றனர்.
பீகார் தேர்தல்கள் இன்னும் ஒரு விஷயத்தை நிரூபித்துள்ளன. இப்போது நாட்டின் வாக்காளர்கள், குறிப்பாக நமது இளம் வாக்காளர்கள், 'வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவதை (SIR) மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். பீகார் இளைஞர்களும் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவளித்துள்ளனர்.
இப்போது ஒவ்வொரு கட்சியும் வாக்குச் சாவடிகளில் தங்கள் கட்சிகளை செயல்படுத்தி, வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணியில் ஆர்வத்துடன் இணைந்து, 100 சதவீத பங்களிப்பை வழங்குவது பொறுப்பாகும். இதனால் மீதமுள்ள இடங்களிலும் வாக்காளர் பட்டியல் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்படும்'' என்றார்.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.மாறாக எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பாஜக கூட்டணியில் பாஜக 89 தொகுதி, நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மாறாக ‛மகாகத்பந்தன்' கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த 2 கூட்டணியை தவிர்த்து தனியாக போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications