இவ்வளவு அவசரம் ஏன்? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வுக்கு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த தடையை உச்சநீதிமன்றம் இன்று நீக்கியிருக்கிறது. இது தொடர்பான வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுகளுக்கும் இடையேயான மோதல் அதிகமாக இருக்கிறது. இப்படி இருக்கையில், தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம் மிகுந்த கவனம் பெற்றிருந்தது.

என்ன சட்டம்?
கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழக சட்டப்பேரவையில் இதற்கான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. அதாவது ஆளுநருக்கு பதிலாக மாநில அரசே நேரடியாக துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், ஆளுநர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழ்நாடு அரசு. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்த சட்டங்களை தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதை எதிர்த்து, திருநெல்வேலி சேர்ந்த பாஜகவின் வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல்கலைக்கழகங்களில் வேந்தராக தமிழக முதல்வரை நியமிக்கும் வகையில், கடந்த 1994 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு நிலுவையில் உள்ள சட்ட திருத்தத்தை வாபஸ் பெறாமல், தமிழ்நாடு அரசு புதியதாக சட்டத்திட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. இது பேரவையின் விதிகளுக்கு எதிரானது என அந்த வழக்கில் மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல தமிழக அரசின் இந்த மசோதாக்கள், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு எதிராக இருக்கிறது என்றும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் இந்த சட்டங்கள், சட்ட விரோதமானவை என்று அறிவிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இடைக்கால தடை
இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன், வி லட்சுமண நாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்கள் நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
ஏன் இவ்வளவு அவசரம்?
இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணையில், "இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க விடுமுறை கால அமர்வு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்?
மீண்டும் விசாரணை
மாநில அரசின் வாதத்தை முன்வைக்க உரிய காலஅவகாசம் வழங்கப்படாத ஒரே காரணத்துக்காக மேல்முறையீட்டு மனு அனுமதிக்கப்படுகிறது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கு அனுப்புகிறோம். மாநில அரசு பதிலளிக்க உரிய காலஅவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மீண்டும் விசாரிக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்திருக்கிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications