Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு.. தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தாக்கல் செய்த வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது அவதூறு பரப்பியோர் மீது தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றம் அதிரடியான கேள்விகளை கேட்டதோடு, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் ஜிஎஸ் மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‛‛திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பிறகு ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

justice-gr-swaminathan-supreme-court-seeks-details-report-on-the-action-taken-on-the-compliant-abou

ஜிஆர் சுவாமிநாதன் மீது யூடியூபர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு அமைப்பினர் ஜிஆர் சுவாமிநாதனை விமர்சனம் செய்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் அவதூறு கருத்துகள். மேலும் நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயே ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். இது நீதித்துறையின் சுதந்திரத்தை தடுக்கும் செயல்முறை. எனவே உடனடியாக உச்சநீதிமன்றம் தலையீடு செய்ய வேண்டும்.

ஏனென்றால் இந்த விவகாரத்தில் உடனடியாக தமிழக அரசு தலையிட வேண்டும் என்று புகார்கள் வழங்கப்பட்டது. ஆனால் காவல்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உச்சநீதிமன்றம் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், பிரசன்னா பி வரலே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‛‛ஒரு நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது என்றால் அதனை ஏன் அரசு தடுக்கவில்லை? தமிழக அர[சு மவுனம் சாதிக்கிறதா?. நீதிபதி ஒரு வழக்கில் தீர்ப்பை வழங்குகிறார் என்பதற்காக அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது என்பது ஏற்கக்கூடியது அல்ல. இதனை உறுதியாக கூறுகிறோம். இவ்வளவு புகார்கள் வழங்கியுள்ளோம் என்று மனுதாரர் சார்பில் தேதி வாரியாக ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் விவகாரத்தில் நீதிபதி குறித்து அவதூறு பரப்பியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தமிழ்நாடு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் இந்த விவகாரம் பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+